சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது…!!

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜனவரி 6 ஆம் தேதி வரை (06.01.2024) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்நிலையில், தற்போது சென்னையில் கோயம்பேடு,  நுங்கம்பாக்கம்,  வள்ளுவர்கோட்டம், வேப்பேரி, புரசைவாக்கம், போரூர்,  மீனம்பாக்கம்,  பல்லாவரம், பொழிச்சலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.அடுத்து வரக்கூடிய மூன்று மணி நேரத்திற்கு சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  ராணிப்பேட்டை,  திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு…

மேலும் படிக்க

வெப் சீரிஸால் சினிமா துறை பின்னோக்கி செல்கிறது என்ற தகவல் பொய்யானது ~ நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!! 

சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் பகுதியில் புதிய வெள்ளி நகை கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த வெள்ளி நகை கடையை சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வருகை குறித்து தெரிந்தவுடன் அவரது ரசிகர்கள் கடை முன்பு கூடி செல்பி எடுக்க முண்டியடித்தனர். நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது பொது கருத்தாக இருந்தால் அது தவறில்லை,  அனைத்து நடிகர்களின் கருத்துதான்…

மேலும் படிக்க

2024-ஆம் ஆண்டில் சூரியனுக்கு மிக அருகில் பூமி செல்லும் பெரிஹேலியன் நிகழ்வு இன்று நடைபெற்றது..!!

சூரியனை நீள்வட்டப் பாதையில் பூமி சுற்றி வருவதால்,  குறைந்த விட்டமுடைய வட்டப்பாதையில் பூமி பயணிக்கும்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் குறைந்து மிக அருகில் சூரியன் தென்படும்.  இதனை பெரிஹேலியன் தினம் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  இதன்படி இன்று (ஜனவரி 3 ஆம் தேதி) இந்திய நேரப்படி காலை 6.08 மணிக்கு சூரியனுக்கு மிகவும் அருகில் பூமி வந்து சென்றது. இந்த நிகழ்வின்போது மற்ற நாள்களில் இருக்கும் தூரத்தைக் காட்டிலும் சூரியன் – பூமிக்கு இடையே 3 மில்லியன்…

மேலும் படிக்க

நீலகிரி,  தேனி மாவட்டங்களில் நாளை (ஜன.4) கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..!!

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதனுடன் ஜன.4-ம் தேதி நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.   தொடர்ந்து ஜன.5-ம் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன.7-ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் குமரிக்குடல் பகுதிகள், இலங்கை கடற்கரையை…

மேலும் படிக்க

தங்கம் விலை அதிகரிப்பு..!!

தங்கம் விலை நேற்று அதிகரித்தது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5,920-க்கும், பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.47,360-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு பவுன் ரூ.51,120-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

மேலும் படிக்க

47-வது சென்னை புத்தக காட்சியை அமைச்சர் ‘உதயநிதி ஸ்டாலின்’ தொடங்கி வைப்பார்..!!

புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி வைக்கிறார்.அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கி விழாப் பேருரை ஆற்றுகிறார். 

மேலும் படிக்க

4 ஆண்டுகளுக்கு பின்னர், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) விதிகள் வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட உள்ளதாக தகவல்..!!

இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம்,  பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய கிறிஸ்தவர்கள்,  சீக்கியர்கள்,  இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ல் நிறைவேற்றப்பட்டது.ஆனால், மதத்தின் அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்கப்படக் கூடாது என்றும்,  அது நாட்டின் அடிப்படை கட்டமைப்பை சிதைத்துவிடும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.  இந்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.  இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். …

மேலும் படிக்க

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோரக் காவல்படை விமானம் மோதியதில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது..!!

ஜப்பான் ஏர்லைன்ஸ் 516 என்ற விமானம் 379 பயணிகளுடன் டோக்கியோவின் ஹனேடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.  இந்த விமானம் டோக்கியோவில்  தரையிறங்கிய போது கடற்படையின் விமானத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்துள்ளது.உடனடியாக விமான நிலையத்தின் தீயணைப்பு வீரர்களும், மீட்புப் படையினரும் விரைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.  ஜப்பான் கடற்படையின் எம்ஏ-722 என்ற சிறிய ரக விமானம் மோதியிருக்கக்கூடும் என்ற முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

2023 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.64 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது..!!

சென்ற டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,64,882 கோடியாக இருந்த நிலையில், மத்திய ஜிஎஸ்டி ரூ.30,443 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.37,935 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.84,255 கோடியாகவும், செஸ் ரூ.12,249 கோடியாகவும் இருந்தது. இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2022 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 1.49 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிலையில், 2023 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.64 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. 2023 ஏப்ரல்-டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 12…

மேலும் படிக்க

நடிகர் சூர்யாவின் 43-வது திரைப்படத்திற்கான பாடல் உருவாகும் பணிகளை துவங்கியுள்ளனர்..!!

நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை  சுதா கொங்காரா இயக்குகிறார். முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். படத்தின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை.மேலும் இப்படக்குழு படத்தின் அறிவிப்பு விடியோ ஒன்றை வெளியிட்டது. இதில்,  போராட்டம், மக்கள் கூட்டம், ரேடியோ, பழைய ரக துப்பாக்கி, ஒலிவாங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் அரசியலை மையப்படுத்தி 1970, 80களில் நடக்கும் படமாக உருவாக வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது. நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram