பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் ஆல் ரவுண்டரான சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டதாக இன்று அறிவித்துள்ளார்..!!

முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனாவுடனான திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதேபோல் சனா ஜாவேதும் தனது சமூக வலைதளத்தில் இந்தத் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இத்திருமண அறிவிப்பு மூலமாக சானியா மிர்சா, சோயிப் மாலிக் இருவரும் பிரிந்து விட்டதாகக் கூறப்பட்ட செய்தி உறுதியாகி இருக்கிறது.முன்னதாக, சனியா மிர்சா சமூக வலைதள பதிவு ஒன்றில், “திருமணம் கடினமானது, விவாகரத்து கடினமானது. உங்கள் கடினமானதை தேர்வு செய்யுங்கள். உடல் பருமன் கடினமானது, சிக்கென்று இருப்பது…

மேலும் படிக்க

‘மாலத்தீவு’ சுற்றுப்பயணத்தை ரத்து செய்பவர்களுக்கு ஒரு தட்டு ‘சோலே பத்தூர்’  இலவசமாக தருவதாக நொய்டாவில் உள்ள பாதுரா அறிவித்துள்ளது..!!

மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.  இதையடுத்து,  பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன் வைத்து,  மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர்.  மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர்,  கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்,  நடிகர் ரண்வீர் சிங்,  நடிகர்…

மேலும் படிக்க

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு பெரிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது..!!

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு பெரிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது.  ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் X இல் பல மாதங்களாகச் சோதிக்கப்பட்டு வந்தது,  இப்போது அது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியிடப்படுகிறது. X அறிக்கையின்படி,  “ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சத்தை X இப்போது வெளியிடத் தொடங்கியுள்ளது. பல பயனர்கள் அதன் புதுப்பிப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் இன்னும் பலர் அதைப் பெறவில்லை.  இது அடுத்த…

மேலும் படிக்க

திருச்சி : சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு கோயில் யானை ஆண்டாள் மெளத் ஆர்கன் வாசித்து காட்டியது..!!

பிரதமர் நரேந்திர மோடி சரியாக 11.20 மணிக்கு ஆலயத்திற்குள் சென்றார்.  ஒவ்வொரு சன்னதியாக சென்று தரிசனம் செய்த நிலையில் புகழ் பெற்ற கம்பராமாயணம் மண்டபத்திற்கு சென்ற பிரதமர் கம்பராமாயணத்தை பாராயணம் செய்ய அதனை அமர்ந்து கேட்டார்.  அதன் பின்னர் தாயார் சன்னதியில் நவராத்திரி கொலு மண்டபத்தில் அஷ்டலட்சுமி விளக்கேற்றி வழிபாடு செய்தார்.பின் ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள்,  அருகில் சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்.  அப்போது யானைப் பாகன்,  ஆண்டாள் யானையிடம் மெளத் ஆர்கன்…

மேலும் படிக்க

கொடிய நிபா வைரஸுக்கு,  பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் முதன்முதலில் தடுப்பூசி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்..!!

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் கேரளாவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் பரவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிபா வைரஸ் வெளவால்களால் பரவுகிறது.  பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் (பன்றிகள் போன்றவை) அல்லது நெருங்கிய தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து நபருக்கு பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  அவசர ஆராய்ச்சி தேவைப்படும் நோயாக உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த வைரஸ்,  தட்டம்மை போன்ற நன்கு அறியப்பட்ட நோய்க்கிருமிகளான பாராமிக்சோவைரஸின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்று அவர்கள்…

மேலும் படிக்க

உரிய பாதுகாப்புடன் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவதாக அமைச்சர் ‘உதயநிதி ஸ்டாலின்’ தெரிவித்துள்ளார்..!!

உலகப் புகழ்பெற்ற  மதுரை அலங்காநல்லூரில்ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது.  இந்த விழாவை காலை 7 மணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  முதலாவதாக களத்தில் வீரங்கொண்டு விளையாடும் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயில் காளை களமிறங்கியது. கோயில் காளைகளை தொடர்ந்து மற்ற ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படுகிறது. வீரர்கள் போட்டிக் கொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர். இப்போட்டியில் விளையாட 6,099 காளைகளும்,  1,784 வீரர்களும் முன்பதிவு செய்திருந்த நிலையில்,…

மேலும் படிக்க

பொங்கலுக்கு நாளை வெளியாகும் 4 திரைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் எப்போதும் பண்டிகை தினங்களான தீபாவளி,  பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம்.  அப்படங்கள் குடும்பங்களுடன் கொண்டாடப்படுவது வழக்கம்.  அந்த வகையில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு நான்கு படங்கள் வெளியாக உள்ளன.  திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்களை இங்கு காண்போம்.பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு கேப்டன் மில்லர்,  அயலான்,  மிஷன் சேப்டர்-1, மெரி கிறிஸ்துமஸ் ஆகிய திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளிவரவுள்ளன.

மேலும் படிக்க

வெங்காய விலை குறைவால் விவசாயிகள் கண்ணீர்..!!

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுமாம்’’ என கிராமங்களில் கேலியாக சொல்லப்படும் பழமொழிக்கு ஏற்ப பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் உற்பத்தி செலவுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். பெரம்பலூர்…

மேலும் படிக்க

மார்க் சக்கர்பெர்க் புதிதாக மாட்டு இறைச்சி தொழில் செய்ய முடிவு செய்திருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்..!!

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனரான மார்க் சக்கர்பர்க், பல்வேறு துறைகளில் தடம் பதித்து பல சாதனைகளையும் புரிந்துள்ளார். அந்தவகையில் தற்போது மாடு வளர்ப்பு தொழிலில் களமிறங்கியுள்ளார். மாடுகளுக்கு சோளம், புற்கள் மற்றும் தீவணத்தைப் போட்டுப் பார்த்திருப்போம். ஆனால், மார்க் தனது நிறுவனத்தின் சிறந்த மாட்டு இறைச்சியை உருவாக்குவதற்காக தங்கள் பண்ணையில் உள்ள மாடுகளுக்கு உலர் கொட்டைகள், உள்ளூரில் தயாரிக்கப்படும் பீர் ஆகிவற்றை கொடுத்து வளர்த்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.வேலைப்பளுவுக்கு நடுவிலும் மார்க் சக்கர்பெர்க் தனக்குப் பிடித்ததைச் செய்யத்…

மேலும் படிக்க

மாலத்தீவு : இந்திய சுற்றுலாத் தலங்கள் குறித்து தோனி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!!

மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.  இதையடுத்து,  பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து,  மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர்.  மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங்,  நடிகர் அக்சய்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram