சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (7.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..!!

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் எதிர்பாராத தொடர் கனமழையால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடரந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழக்குன்றத்தில் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளையும்(டிச.7, வியாழக்கிழமை) விடுமுறை…

மேலும் படிக்க

சென்னைய புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது..!!

வங்கக்கடல் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மிக்ஜம் புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நிலைகொண்டிருந்தது. இந்நிலையில், தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டிருந்த…

மேலும் படிக்க

நடிகர் விஷ்ணு விஷால், ஆமிர் கான் பத்திரமாக மீட்பு..!!

நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எனது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காரப்பக்கத்தில் மோசமான அளவில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நான் உதவியை நாடியுள்ளேன். மின்சாரமோ, வைஃபையோ, ஃபோன் சிக்னலோ எதுவுமே இல்லை. மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் எனக்கு சிக்னல் கிடைக்கிறது. எனக்கும், இங்கு வசிக்கும் பலருக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறோம். சென்னை முழுவதும் உள்ள மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது” என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து,…

மேலும் படிக்க

அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு..!!17 பேர் உயிரிழப்பு..!!

மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை பெருநகரில் 69 இடங்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி போக்குவரத்து நிலை, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவலை சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ளது.  புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை….

மேலும் படிக்க

சென்னை சைதாப்பேட்டையில் குடியிருப்பு பகுதியைச் சூழந்துள்ள அடையாறு ஆற்றின் வெள்ளம்..!!

சென்னை அடையாறு – ஆற்றில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 40,000 கனஅடி தண்ணீர் பாய்வதால், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், சைதாப்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அடையாறு ஆற்றின் கரையோர வீடுகள், கட்டிடங்கள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன. தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி.மீ. தொலைவில் நெருங்கியபோது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர்,…

மேலும் படிக்க

கொத்தவரை கிலோ ரூ.50..!!விவசாயிகள் மகிழ்ச்சி..!!

தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, தருமபுரி உள்ளிட்ட வட்டங்களில் விவசாயிகள் பலர் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கொத்தவரை சாகுபடியும் அடங்கும். நார்ச்சத்து, கால்சியம் சத்து உள்ளிட்ட நன்மை பயக்கும் பல சத்துக்குள் கொத்தவரையில் நிறைந்துள்ளன. கொத்தவரங்காய் விலையில் பெரிய அளவில் விலை சரிவு மற்றும் உயர்வு இல்லாமல் சீரான விலையிலேயே விற்பனையாகி வரும். சில நேரங்களில் மட்டும் விலை அதிகரிக்கும். அதன்படி, கடந்த சில நாட்களாக கொத்தவரை விலை படிப்படியாக அதிகரித்து…

மேலும் படிக்க

தங்கம் விலை உச்சத்தை எட்டி விற்பனையாகிறது..!!

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு டிச.25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்பனையானது. 26-ம் தேதி ரூ.43,040 ஆக அதிகரித்தது.தங்கம் விலை நேற்று அதிகரித்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.5,915-க்கும், பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.47,320-க்கும் விற்பனையானது. இதன்மூலம், தங்கம்விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதேபோல், 24 காரட் சுத்ததங்கத்தின் விலை பவுன் ரூ.51,080-க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம்…

மேலும் படிக்க

நடிகை ரித்திகா சிங்குக்கு படபிடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளது..!!

சமீபத்தில் விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.  உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ளும் இவர் சமீபத்தில் சிறிது உடல் எடை கூடியதற்காக தினமும் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஜிம் பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளில் ஆர்வம் காட்டும் ரித்திகா அண்மையில் உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் ரித்திகா சிங்குக்கு படபிடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த ரித்திகா சிங்,  ‘இதனை பார்க்கும்போது…

மேலும் படிக்க

நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது என ‘பிரதமர் மோடி’ தனது X தளப்பதிவில் தெரிவித்துள்ளார்..!!

துபாயில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான COP28 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்று காலநிலை மாற்றம் தொடர்பாக கலந்துரையாடினர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மோடி,  இத்தாலி பிரதமர் மெலோனியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை தனது X தளத்தில் பகிர்ந்த ஜார்ஜியா, ‘காப்28-ல் நல்ல நண்பர்கள்’ எனும் கேப்ஷனோடு பதிவிட்டிருந்தார். மேலும் அந்த…

மேலும் படிக்க

அத்தியாவசிய பொருட்களான பால்,  காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது..!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.  பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும்,  வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே இன்று மிக்ஜாம் புயல் கரையை  கடக்கிறது.  ஏற்கனவே சென்னை,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram