2023க்கு விடைகொடுத்து 2024-ஐ வரவேற்கத் தயாராகிவிட்டனர் மக்கள்..!!
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில், 2024ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் அமைவதற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்படுகளை செய்துள்ளது. முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை,…