“சேரி என்று கூறியதற்காக வருத்தம் தெரிவிக்க முடியாது” ~ குஷ்பு..!!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு பேசியதாவது: “சேரி என்பதை நான் பகடியாக கூறினேன். அதற்கு பிரஞ்சு மொழியில் அழகு என்று அர்த்தம். எப்போதுமே என்னுடைய பதிவுகளில் பகடி இருக்கும். ஒரு பெண்ணை பார்த்து தகாத வார்த்தையை பேசுபவர்களை கேட்காமல், நான் ஒரு வார்த்தையை சொன்னதற்காக என்னை கேட்கிறார்கள். எனக்கு தெரிந்த மொழியில் தான் நான் பேச முடியும். நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. பயந்து பின்வாங்கும் ஆள் நான் கிடையாது. சேரி என்று…