10 நிமிட இஸ்லாமிய தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்றால், கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் மற்றும் பஜனைகளை என்ன சொல்வது : குஜராத் உயர்நீதிமன்றம்..!!
குஜராத் தலைநகர் காந்திநகரைச் சேர்ந்த தர்மேந்திரா ப்ரஜபதி என்ற மருத்துவர் அண்மையில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், “மசூதிகளிலும், பள்ளிவாசல்களிலும் நாளொன்றுக்கு தொழுகை 5 முறை ஒலிப்பெருக்கியில் ஒலிபரப்பப்படுகிறது. இது அதிக சத்தத்தில் ஒலிபரப்பப்படுவதால் ஒலி மாசு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வயதானவர்கள், நோயாளிகளுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. எனவே, மசூதிகளில் தொழுகைகள் ஒலிப்பெருக்கியில் ஒலிபரப்பப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவானது, குஜராத்…