தங்கம் விலை நிலவரம்..!!

இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. சென்னை – ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 5,415 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 5,907 (1 கிராம்) ஆகவும் உள்ளது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

2000 வருடத்திற்கு முன்பே மேக்-அப் பொருட்களை பயன்படுத்திய நகரம் பற்றி ஆச்சர்ய்தக்க ஆராய்ச்சி..!!

2000 வருடங்களுக்கு முன்பு அழகு சாதனைப் பொருட்களை ரோம பேரரசின் பழமையான நகரமான அஜினோயில் பயன்படுத்தியுள்ளதாக சமீபத்தில் வெளியான தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.  இவற்றை ரோம காலத்தில் உள்ள பெண்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததில், நகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனை போன்ற அழகுசாதனப் பொருட்களை விற்கும் ஒரு கடையை இருந்ததாகவும் அந்த ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கின்றன.  மேலும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நெக்லஸ்கள் மற்றும் ஹேர்பின்களில் இருந்து பல்வேறு…

மேலும் படிக்க

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் யுபிஐ செயலிகளில் தவறுதலாக வேறு யாருக்காவது பணப்பரிவர்த்தனை செய்துவிட்டால் என்ன செய்யவேண்டும்..!!

டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் எளிதாக பணம் அனுப்ப உதவுகின்றன. அதுபோல சாதாரண டீக்கடையில் தொடங்கி மிகப் பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் என அனைத்து இடங்களிலும் ‘க்யூஆர் கோடு’ மூலமாக பணம் அனுப்பும் முறையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகனின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை..!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக இருப்பவர் ராமேஸ்வர முருகன் (55). இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த வெள்ளாங்கோவில். இங்கு அவருக்கு சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய் மற்றும் தந்தை வசித்து வருகின்றனர். ராமேஸ்வர முருகன் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து வீட்டில் தங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ரேகா தலைமையில் 6…

மேலும் படிக்க

சென்னை : வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகளை கொள்ளை..!!

சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் 68 வயதான முதியவர் ரபுதீன்.  இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அபிதாபியில் வேலை செய்து வந்தார். அதன் பிறகு அவரது மனைவியுடன் ஓட்டேரியில் வசித்து வருகிறார்.  இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  இரண்டு மகன்களும் ஜெர்மனியிலும்,  மகள் சவுதியிலும் வசித்து வருகின்றனர். கணவன்- மனைவி இருவரும் ஓட்டேரி மற்றும் அவர்களுக்கு சொந்தமான பெரம்பூர் ஜமாலியா ரோடு பகுதியில் உள்ள மற்றொரு வீடு என இரண்டு வீட்டிலும் மாறி…

மேலும் படிக்க

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் பதுக்கல்..!!

சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் குறித்த ஐந்தாம் கட்ட தகவல் பெறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளுடன் இதுபோன்ற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது வழக்கமான நடைமுறையாகும். அந்த வகையில், தற்போது 104 நாடுகளுடன் சுமார் 36 லட்சம் நிதிக் கணக்கு குறித்த விவரங்களை சுவிஸ் வங்கிகள் பகிர்ந்துள்ளன. அந்த தகவல்களின் அடிப்படையில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. வருமான வரி துறைக்கு தெரியாமல், வெளிநாடுகளில் சொத்துகளை…

மேலும் படிக்க

இந்தியாவுக்கும் சீனாவைப் போல கடன்கள் அதிகம்..!!

”இந்தியாவின் தற்போதைய கடனும் சீனாவைப் போன்று அதிகமாக உள்ளது. இந்தியாவின் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 81.9% உள்ளது. சீனாவின் கடன் அந்நாட்டின் ஜிடிபியில் 83% உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு இந்தியாவின் கடன் 75% மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 8.8% என கணிக்கப்பட்டுள்ளது.இதில் பெரும்பகுதியான 5.4% வட்டிக்கான செலவினங்களால் ஏற்படுகிறது. முதன்மை பற்றாக்குறை 3.4% உள்ளது. சீனாவைப் போல வரும் ஆண்டுகளில் இந்தியாவின் கடன் அதிகரிக்க…

மேலும் படிக்க

சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம்..!!

சென்னை செம்மஞ்சேரியில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.  உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பதற்கான ஆலோசகர் நிறுவனத்தை பணியமர்த்த,  அதற்கான ஒப்பந்த புள்ளி வெளியாகி உள்ளது. அதன்படி, விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்,  அதிநவீன விளையாட்டு நகரம் அமைப்பதற்கான மின்னணு மூலம் ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது. அதன்படி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் செம்மஞ்சேரியில்…

மேலும் படிக்க

நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ள பயணிகள் கப்பல்..!!

நாகையிலிருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழர்களின் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் முக்கியத் துறைமுக நகரமாக நாகை விளங்கியது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நாகை துறைமுகம் முக்கிய ஏற்றுமதி, இறக்குமதி தளமாகவும் திகழ்ந்தது. பன்னாட்டு சரக்குப் போக்குவரத்து மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தும் மேற்கொள்ளப்பட்டது. அந்த காலக்கட்டத்தில், ரோனா, ரஜூலா, ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் ஆகிய கப்பல்கள் நாகை…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்..!!

மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram