“விடாமுயற்சி” திரைப்படத்தின் கலை இயக்குனர் மிலன் அஜர்பைஜானில் படப்பிடிப்பின் போது மாரடைப்பால் இன்று காலமானார்..!!

அலைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விடா முயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது மிலனின் உயிர் பிரிந்துள்ளது. அஜித் நடிப்பில் முன்பு வெளியான பில்லா, வீரம், வேதாளம், துணிவு உள்ளிட்ட படங்களிலும் மிலன் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

திருப்பத்தூர் : கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவான உறவினர் கைது..!!

பனந்தோப்பு அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த ஜீவிதா பர்கூர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரை உறவினரான சின்ன கசிநாயக்கன் பட்டியை சேர்ந்த சரண்ராஜ் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜீவிதா, சரண்ராஜ் இடம் கடந்த சில மாதங்களாக பேசாத காரணத்தால் ஆத்திரமடைந்த அவர், ஜீவிதாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் ஜீவிதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர்…

மேலும் படிக்க

செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில்லை தேர்வு செய்து  சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது..!!

ஐசிசி உலகக்கோப்பை  தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  இந்த அணியில் சுப்மன் கில்லும் இடம்பெற்றிருந்தார். இவர் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக போட்டியில் விளையாடமல் இருந்த நிலையில் நேற்றைய இந்தியா பாகிஸ்தான் போட்டியில் சுப்மன் கில் கலந்து கொண்டு விளையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வருகிறார். மேலும் கிரிக்கெட் தரவரிசை பட்டியலிலும் அவர் பல சாதனைகளை…

மேலும் படிக்க

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் : மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி..!!

போர்ப்ஸ் இதழ் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் (ரூ.7.63 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். கவுதம் அதானி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 68 பில்லியன் டாலராக (ரூ.5.64 லட்சம் கோடி) உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி சொத்து மதிப்பு சரிந்துள்ளதாக போர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம்…

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை..!!

சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் பெரிய காய்கறி மார்க்கெட்டில் ஒன்றாகும். இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகளும், விவசாயிகளும் பங்கேற்கின்றனர். வெளியிடங்களில் இருந்து கொண்டு வரும் சின்னவெங்காயம் மற்றும் காய்கறிகளை சில்லறை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்,இதனால் 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சின்னவெங்காயம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை விற்பனையாகி வந்த நிலையில், நேற்று ரூ.4 ஆயிரமாக விலை உயர்ந்தது. சின்னவெங்காயம்…

மேலும் படிக்க

தங்கம் விலை ரூ.800 உயர்வு..!!

தங்கம் விலை ஒரே நாளில்பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.44,080-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை நேற்று காலை கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,410-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,280-க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று மாலை தங்கம் விலை திடீரென அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து ரூ.5,410-க்கும், பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.44,080-க்கும் விற்பனையானது. இதேபோல்,…

மேலும் படிக்க

நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை..!!

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவது என பிரதமர் மோடி-இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத்தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து பணிகளும் தொடங்கி முடிவடைந்து விட்டது. கடந்த 8-ந்தேதி நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சோதனை ஓட்டமும் நடந்து முடிவடைந்து விட்டது. 150 பேர் பயணம் செய்யும் இந்த கப்பலில் நாகையில் இருந்து இலங்கைக்கு செல்வதற்காக 30 பேரும், இலங்கையில் இருந்து…

மேலும் படிக்க

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இன்று 8-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது..!!

பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என பொதுமக்களுக்கு இஸ்ரேல் கெடு விடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காசா மீது தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும், எனவே காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது….

மேலும் படிக்க

இஸ்லாமிய சிறை கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை தமிழ்நாடு அரசு பறிப்பதாக : எடப்பாடி பழனிசாமி..!!

” சிறைச் சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல, அவர்களை நல்வழிப்படுத்தும் இடங்களுமாகும். கடந்த 29 மாத  திமுக ஆட்சியில், சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக செய்திகள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதாக நாளிதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. எந்த மதத்தைச் சார்ந்த சிறைக் கைதியாக இருந்தாலும், ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு வழிபாட்டு உரிமைகள் வழங்கப்பட்டு வந்தன. குறிப்பாக, வேலூர் மத்திய சிறைச் சாலையில் காலம்…

மேலும் படிக்க

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகம்..!!

பிக்சல் 8 சீரிஸ் மாடல்களின் இந்திய விற்பனை துவங்கி இருக்கிறது. இந்திய சந்தையில் பிக்சல் 8 விலை ரூ. 75 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 82 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. கூகுள் பிக்சல் 8 மாடல் பயனர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் மற்றும்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram