ஆனைமலையை அடுத்த ரமண முதலி புதூரில் பழைய ஆயக்கட்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இஞ்சி பயிர்..!!
ஆழியாறு ஆற்று நீரை பழமைமிக்க 5 ஆயக்கட்டு வாய்க்கால்கள் மூலம் வயல்களில் பாய்ச்சி, குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவித்த ஆனைமலை கரவெளியின் நெல் சாகுபடி நடந்த வயல்வெளிகள், தற்போது மாற்று பயிர்களுக்கு தயார்படுத்தப்படுகின்றன. பள்ளி விளங்கால், வடக்கலூர் அம்மன் வாய்க்கால் வயல் பகுதியில் கடந்த சில போகங்களாக நெல் சாகுபடியில் போதிய வருவாய் இல்லாமல் இருந்த விவசாயிகள், மாற்றுப்பயிராக இஞ்சியை தேர்ந்தெடுத்து லாபம் ஈட்ட தொடங்கியுள்ளனர். இது குறித்து நெல் விவசாயிகள் கூறும்போது, “ஆனைமலை…