தூத்துக்குடி : காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது..!!

தசரா திருவிழா மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.  இதனால்,  சந்தையில் காய்கறி  விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  அவரைக்காய் கிலோ 120 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரையும்,  பீன்ஸ் கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 70 ரூபாய் வரை விற்பனை ஆகி வருகிறது. தூத்துக்குடி காய்கறி சந்தையில் வழக்கத்தை விட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  கிலோவிற்கு 30 ரூபாய்…

மேலும் படிக்க

‘லியோ’ படத்தை பார்த்த பின் அமைச்சர் ‘உதயநிதி’ ட்வீட்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ.  த்ரிஷா,  அர்ஜூன்,  சஞ்சய் தத்,  கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.  ஆயுத பூஜையை முன்னிட்டு லியோ படம் நாளை (அக் 19) வெளியாக உள்ளது.லியோ திரைப்படத்தின் ஆடியோ – இசை வெளியீட்டு விழா தொடங்கி அதிகாலை காட்சி…

மேலும் படிக்க

இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வந்தனர்..!!

இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்ட 5சிறுவர்கள் உட்பட 23 தமிழர்கள் நேற்றிரவு டெல்லி வந்தனர். அவர்களில் 17 பேர் சென்னைக்கும், 4 பேர் கோவைக்கும்,  2 பேர் மதுரைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.சென்னையை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில்  இருந்து புறப்பட்டு  சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு அவர்களை எம்.பி கலாநிதி வீராசாமி வரவேற்றார். இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தீவிரமடைந்த நிலையில்,  ஒன்றிய அரசு 5…

மேலும் படிக்க

அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி சுழற்சி..!!

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த…

மேலும் படிக்க

படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இந்தியா கேட்..!!

இந்தியா கேட் சமீபத்தில் சென்னையில் “ஜெயிலர்” திரைப்படத்தின் திரையிடலின் போது PVR உடன் கைகோர்த்தது, இதன் விளைவு வாய் பிளக்கவில்லை. இந்த தனித்துவமான சமூகப் பரிசோதனையானது, அவர்களின் சினிமா பயணம் மறக்க முடியாத சாகசமாக பரிணமித்தது, உரையாடல்களைத் தூண்டி, திரைக்கு உள்ளேயும் வெளியேயும் கவனத்தை ஈர்த்ததைக் கண்டு பார்வையாளர்களை மயக்கமடையச் செய்தது. பார்வையாளர்களின் எதிர்வினைகள் அசாதாரணமானவை அல்ல. இந்த எதிர்பாராத சமையல் பயணத்தால் அவர்கள் வியப்பும், சிலிர்ப்பும், உற்சாகமும் அடைந்தனர். திரையரங்கம் அனிமேஷன் விவாதங்களால் சலசலத்தது, மேலும்…

மேலும் படிக்க

தன்பாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரிய வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது..!! 

இந்தியாவில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. மாறாக ஆணும் – ஆணும், பெண்ணும் – பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி கிடையாது. இந்நிலையில் இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா…

மேலும் படிக்க

கொட்டும் மழையில் நகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் உரிய கவச உடையின்றி தூய்மை பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..!!

தமிழ்நாட்டில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் தூர்வாருதல் மற்றும் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இங்குள்ள 4வது வார்டு பகுதியில் கொட்டும் மழையில் தூய்மை பணியாளர் ஒருவர் போதிய கவச உடைகளின்றி குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதுகுறித்து ரெயின்கோட் இல்லாமல் தூய்மை பணி செய்து வருவதை ஒருவர்…

மேலும் படிக்க

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுமழை தொடரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம்..!!

இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் 11 நாளாக தொடர்கிறது.  காஸா மீது முப்படை தாக்குதலுக்கு தயாராகியுள்ள இஸ்ரேல் ராணுவம், தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது.  இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் இதுவரை 2 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.நாளுக்கு நாள் போர் தீவிரமாகி வரும் நிலையில்,  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  அப்போது அவர் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதற்கு…

மேலும் படிக்க

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்ட வழக்கில் ஒரு சிறுவன், 6 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நீடித்து வருகிறது. பழங்குடி அந்தஸ்து வழங்கக் கோரி மைதேயி சமூகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு கூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இரு பெண்கள்  நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்த சம்பவத்தில் கால நிர்ணயம் செய்து குற்றவாளிகளைக் கண்டறிந்து…

மேலும் படிக்க

“லியோ” திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ.  த்ரிஷா,  அர்ஜூன்,  சஞ்சய் தத்,  கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு லியோ படம் நாளை மறுநாள் (அக் 19) வெளியாக உள்ளது. இதனிடையே படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கியுள்ள தமிழக…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram