புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் உள்ள மீனவர் வலையில் சிக்கிய அரிய வகைமீன் ரூ.12,000-க்கு விற்பனை..!!

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் கோதாவரிஆற்றுப்படுகையில் உள்ளது.  இங்கு கடலும் ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில்மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இந்த பகுதியில் ”பாண்டுகப்பா”என்ற அரியவகை மீன் எப்போதாவது வலையில் சிக்கும்.இந்த வகை மீனுக்கு ஆந்திர மாநில மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.  இந்நிலையில் ஏனாமில் பொன்னாட வரதம் என்ற மீனவர் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டுகப்பா மீன் சிக்கியது.  இந்த மீன் துறைமுக பகுதியில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.  இதனை…

மேலும் படிக்க

கோடியக்கரை : மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் 9 பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதி..!!

நாகப்பட்டினத்தில் இருந்து 9 மீனவர்கள் விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் மீன் வளம், மீனவர் நலத் துறையினரிடம் அனுமதியும் பெற்றுள்ளனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கடலில் தள்ளி சித்திரவதை செய்துள்ளனர். விசைப் படகில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள்,  தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.  இந்நிலையில்,  கரை திரும்பிய மீனவர்கள் நாகப்பட்டினம்…

மேலும் படிக்க

சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது..!!

சர்க்கரையின் விலை உள்நாட்டில் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தடை விதித்தது. இதில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து கச்சா சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இயற்கை சர்க்கரை ஆகியவற்றின் ஏற்றுதிக்கு…

மேலும் படிக்க

பண்டிகை நாட்களால் தேங்காய் விலை உயர்வு..!!

முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களால் பயன்பாடு அதிகரித்து தேங்காய் விலை உயர்ந்துள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை விவசாயம் மற்றும் தேங்காய் வர்த்தகத்தின் மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், வியாபாரிகள், சிறுதொழில் முனைவோர் எனப் பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர்.  நிகழாண்டில் தென்னை மரங்களில் வழக்கத்தை விட மகசூல் அதிகரித்தால், தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால், கடந்த மாதங்களில் தேங்காயை இருப்பு வைக்காமல், கிடைக்கும்…

மேலும் படிக்க

‘சித்தா’ படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதையடுத்து, ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டுள்ளன..!!

சித்தார்த்-ன் அண்ணன் திடீரென உயிர் இழக்கிறார். அதன் பின்னர் அவரது குழந்தை தனது அம்மாவை விட தனது சித்தப்பா மீது மிக பாசமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சித்தப்பாவை சித்தா என்று அன்பாக அழைக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த குழந்தை காணாமல் போகிறது. அந்தக் குழந்தை ஏன் காணாமல் போகிறது? குழந்தையை கண்டுபிடித்தார்களா? என்பதுதான் படத்தின் மீதி கதை.இப்படத்திற்கு இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். பாடல்களை விவேக், யுகபாரதி மற்றும் S.U.அருண் குமார் எழுதி உள்ளனர்….

மேலும் படிக்க

சின்ன வெங்காயத்தின் விலை இன்று ரூ.130..!!

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி மற்றும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.குறிப்பாக சின்ன வெங்காயம் தான் பொதுமக்களுக்கு அதிகளவில் அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்று முன்தினம் கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை சதம் அடித்தது. அடுத்தடுத்த நாட்களில் விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். காரணம்…

மேலும் படிக்க

‘லியோ’ திரைப்படம் தமிழ்நாட்டிலும் வெளியானது..!! ரசிகர்கள் தீபாவளி போல கொண்டாடி வருகின்றனர்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த லியோ திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5…

மேலும் படிக்க

பெர்லினில் உள்ள யூத தேவாலயம் ஒன்றில் நேற்று பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது..!!

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13வது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது.காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனி தலைநகரான பெர்லினில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கலவரத்தின்போது போலீஸாருக்கும், இஸ்லாமியர்களுக்கும்…

மேலும் படிக்க

காஸா பகுதியில் 12 நாள்களாக இஸ்ரேல் ராணுவம் தீவிர விமானத் தாக்குதல்..!!

காஸா ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறியது. அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் கடந்த 7-ம் தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர்.இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமார் 1,000 ஹமாஸ் அமைப்பினர், சுமார் 25 கி.மீ. வரை உள்ளே…

மேலும் படிக்க

‘லியோ’ படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ரசிகர் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்டது..!!

த்ரிஷா,  அர்ஜூன்,  சஞ்சய் தத்,  கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த லியோ திரைப்படம்,  இன்று உலகம் முழுவதும் வெளியானது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான  ‘லியோ’ திரைப்படம்,  தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டுள்ளது….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram