“கூகுள்” நிறுவனம் தனது ‘குரோம்புக்’ லேப்டாப்புகளை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டு உள்ளது..!!
நாட்டில் விற்பனை செய்யப்படும் கணினி, லேப்டாப், டேப்லெட் ஆகிய மின்னணு சாதனங்களில் 90 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் 58 சதவீதம் சீனாவை சேர்ந்தவை. இந்நிலையில், உள்நாட்டிலேயே மின்னணு சாதனங்களை தயாரிக்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த சூழலில் கணினி, லேப்டாப், டேப்லெட் ஆகிய 7 மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதுதொடர்பாக மத்திய வணிக, தொழில் துறை கடந்த…