சிறையில் இருக்கும் ‘நர்கிஸ் முகம்மதிக்கு’ அமைதிக்கான நோபல் பரிசு..!! யார் இந்த நர்கிஸ்..??!

ர்கிஸ் முகம்மதி சிறு பிள்ளையாக இருந்தபோது அவரது தாய் அவரிடம் இவ்வாறாகச் சொல்லியுள்ளார். “மகளே, நீ ஒருபோதும் அரசியல் பழகாதே. ஈரானைப் போன்ற அரசியலமைப்பு கொண்ட நாட்டில் அமைப்புகளுக்கு எதிராகப் போராடினால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்”. இவ்வாறு நர்கிஸின் தாய் சொன்னது தீர்க்க தரிசன வார்த்தைகள் போன்று பலித்தேவிட்டது. ஈரான் அரசியல் அமைப்பை எதிர்த்து அரசுக்கு எதிராக நர்கிஸ் கொடுத்த குரல் அவரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியுள்ளது. நர்கிஸ் ஒரு பொறியியல் நிபுணர்….

மேலும் படிக்க

தென்னிந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் : ‘லியோ’..!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.கடந்த 5-ஆம் தேதி இப்படத்தில் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பான…

மேலும் படிக்க

தங்கம் விலை ஏற்றம்..!!சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இதற்கிடையே, செப்.25-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அக்.3-ம் தேதி ரூ.528 வரை குறைந்தது. கடந்த இரண்டு வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 5) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.42,360-க்கு விற்பனையாகிறது.24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம்…

மேலும் படிக்க

ரூ.1,932 கோடி ஜிஎஸ்டி கட்ட வேண்டும்’ என்று ஓசூர் முட்டை வியாபாரிக்கு நோட்டீஸ்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்ப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜா நடராஜன்(50). அங்குள்ள உழவர் சந்தை சாலையில், சிறிய கடையில் முட்டை வியாபாரம் செய்துவருகிறார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ராஜா நடராஜனுக்கு, சென்னை வணிக வரித் துறை அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் வந்தது. அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததால், அதை அவர் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே, ராஜா நடராஜனின் மனைவி கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. மனுவின்நிலையை அறிய இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது, ‘குடும்பத்தில்…

மேலும் படிக்க

‘தீபாவளி’யை முன்னிட்டு ரூ.450-க்கு சிறப்பு இனிப்பு தொகுப்பு : ஆவின்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 5 வகையான இனிப்புகள் அடங்கிய 500 கிராம் தொகுப்பு ரூ.450-க்கு ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: பால் மற்றும் பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலை மற்றும் சிறந்த தரத்தோடு வழங்கிவரும் ஆவின் நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.  ஆவின் தனது பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர்பாகு,…

மேலும் படிக்க

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்..!!

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், ‘ஆபரேஷன் அல் அக்சா பிளட்’ என்ற பெயரில் இன்று திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து…

மேலும் படிக்க

ஜோக்கர் இரண்டாம் பாகத்தின் புதிய புகைப்படத்தை இயக்குநர் டோட் பிலிப்ஸ் பகிர்ந்துள்ளார்..!!

டாட் பிலிப்ஸ் இயக்கிய ‘ஜோக்கர்’ படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. விரைவில் திரைக்கு வரவுள்ள அதன் தொடர்ச்சிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், படத்தின் படப்பிடிப்பிலிருந்து சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின, இதில் ஜோக்கரின் கெடப்பில் லேடி காகாவைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், இப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து, படத்தின் இயக்குநர் ஜோக்கர் இரண்டாம் பாகத்தின் முதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆர்தர் ஃப்ளெக், மேக்கப் இல்லாமல், மழையில்…

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படும் நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன..!!

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், எக்ஸ் பக்கத்தில், வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன. 2024ஆம் ஆண்டு முற்பகுதியில் வெளிவரும் என்ற பதிவுடன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தூங்கும் பெட்டிகளின் உட்புற வடிவமைப்பு படிப்படியாக இறுதி செய்யப்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறையின் தேவைகளை கருத்தில் கொண்டு தூங்குவதற்கு போதுமான இடம் மற்றும் மேல் படுக்கையை பெறுபவர்களுக்கு வசதியான படிக்கட்டு வடிவமைப்பு பணிகள் ஆகியவை பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும்…

மேலும் படிக்க

‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ள நிலையில், அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் அபுதாபிக்கு பயணம்..!! 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையே, ஐரோப்பாவில் பைக் டூர் சென்ற அஜித்குமார் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதுகுறித்த வீடியோக்களும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகின.சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடமே பத்திரிகையாளர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் நிலவரம்…

மேலும் படிக்க

‘வாலி’ படத்தின் இந்தி உரிமை தொடர்பான வழக்கில் எஸ்.ஜே.சூர்யாவிடம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர வேண்டும் : மாஸ்டர் நீதிமன்றம்..!!

தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், நடிகர் அஜித், சிம்ரன் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான ‘வாலி’ என்ற படத்தின் இந்தி உரிமையை போனி கபூர் பெற்றிருந்தார். இதை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எஸ்ஜே சூர்யா தாக்கல் செய்யவில்லை. மேலும், படத்தின் காப்புரிமை படத்தின் தயாரிப்பாளருக்கே சொந்தம் எனக் கூறி, வாலி படத்தின்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram