தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 22) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை ரூ.1.00 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.79,000 ஆக இருக்கிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,510 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு…

மேலும் படிக்க

சனாதன சர்ச்சைப் பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம்…

மேலும் படிக்க

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால் ரூ.500 அபராதம்..!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று, மேலும் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொதுமக்கள், நிறுவனங்கள், கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்முறை நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், அதனை ஓரிரு நாட்களில்…

மேலும் படிக்க

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு இறுதி கட்ட பணி..!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட முருக்கம்பட்டு, தாழவேடு, அருங்குளம் ஆகிய பகுதியில் வீடுகள் இல்லாத, பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. முருக்கம்பட்டு பகுதியில் 4 மாடிகளில் 1,040 குடியிருப்புகள் ரூ.135.22 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. இதில் ரூ.7 லட்சம் தமிழ்நாடு…

மேலும் படிக்க

“நீட் தேர்வு தகுதியற்றது ஆகிவிட்டதாக சொல்வது அர்த்தமற்றது”..!!

புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “கல்வியறை எவ்வளவு முக்கியமோ அதே அளவில் கழிப்பறைகளும் முக்கியம் என்றார் பிரதமர். அது மட்டுமின்றி கழிப்பறைகள் கட்ட ஆரம்பித்த பின்பு பெண் குழந்தைகள் பெரியவர்களான பின்பும் இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு வருவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் 33 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம். நீட் தேர்வில் தவறான…

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய ஈரோடு காவல் நிலைய போலீஸார்..!!

அசாம் மாநிலம், திப்ரூகார் பகுதியில் இருந்து ஈரோடு வழியாக கன்னியாகுமரி வரைவிவேக் எக்ஸ்பிரஸ் ஓடுகிறது. இந்த ரயிலில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு இருப்பு பாதை காவல் நிலையம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து சம்பந்தப்பட்ட ரயில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த போது, அதில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு பெட்டியில் உள்ள கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த கருப்பு நிற பையை பிரித்து சோதனை செய்தனர்.இந்த சோதனையில் அதில் 16 கிலோ கஞ்சா…

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராமில் எமி ஜாக்சன் புதிய தோற்றத்தில் உள்ள தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்..!!

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். இந்தப் படத்தை அடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். விக்ரமுடன் தாண்டவம், ஐ, தனுஷுடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி, உதயநிதியின் கெத்து, ரஜினிகாந்துடன் 2.0 உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நீண்டநாள்கள் கழித்து அருண் விஜய் நடிக்கும் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கு முன் பிசியாக நடித்து கொண்டு…

மேலும் படிக்க

அண்ணாவை தரக் குறைவாக பேசவில்லை..!! நான் பேசியது தவறு கிடையாது..!! மன்னிப்பு கேட்கவும் முடியாது..!!

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபடுகிறது. 24 ஆண்டுகளாக கிடப்பில் போட்டபட்ட மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வேவ்வேறு காலகட்டங்களாக இந்த மசோதா நிறைய எதிர்ப்புகளை சந்தித்தது. வடஇந்தியாவில் சட்டமன்றத்தில் அதிகமாக பெண்கள் இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் குறைவாக இருக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரை கட்சிக்குள் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்கிறார்கள். தமிழக சட்டப்பேரவையில் 33 சதவீதம் பெண்கள் சட்டசபையில் அமர வேண்டும். நேற்று பாராளுமன்றத்தில் கனிமொழி உட்பட பெண்கள்தான் இது தொடர்பாக அதிகமாக பேசினார்கள்….

மேலும் படிக்க

“துருவ நட்சத்திரம்” திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல்..!!

நீண்டகாலமாக அதாவது 2016-ம் ஆண்டிலிருந்து 7 வருடங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம். இந்த திரைப்படத்தில் நாயகனாக விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன், அர்ஜூன் தாஸ், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் விக்ரம் உடன் முதன்முதலாக கூட்டணி அமைத்தார் கெளதம்.மேலும் நிதி நெருக்கடியால் வெளியாவதில் தாமதமானதாக கூறப்பட்டது. சமீபத்தில் படத்தின் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன் படத்தின்…

மேலும் படிக்க

இயக்குநர் வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு நடித்துள்ள ஷாட் பூட் த்ரீ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டனர்..!!

இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி இயக்கியிருக்கும் ‘ஷாட் பூட் த்ரீ’ என்ற படத்தில்  இயக்குநர் வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram