‘தி ரோட்’ படத்தின் டிரைலரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷா லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அவர் நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் ‘தி ரோட்’ திரைப்படம் அக்.6 ஆம் தேதி திரைக்கு வருகிறது. பான் இந்திய திரைப்படமாக அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் கிரைம் திரில்லர் கதையாக ‘தி ரோட்’ உருவாகியுள்ளது.இப்படத்தில் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில்…

மேலும் படிக்க

அமெரிக்கா 40 மாணவர்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது..!!

40 பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமுற்றவர்களில் மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆரஞ்சு கவுண்டியில் உள்ள நெடுஞ்சாலையில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

19-வது ஆசிய விளையாட்டு போட்டி..!!

சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஆசிய விளையாட்டு போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 8ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.இதில் ஆசியாவை சேர்ந்த சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கின்றன. படி, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, நீச்சல்,…

மேலும் படிக்க

நத்தம், செந்துறை பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி..!!

நத்தம், செந்துறை, சிறுகுடி ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் சிறுகுடி, ஊராளிபட்டி, நத்தம், கோவில்பட்டி, செந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மேற்கண்ட பகுதிகளில் காலை, மாலை, இரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் குறைந்த மற்றும் அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு வீடு, கடைகளில் உள்ள மிக்சி, கிரைண்டர், குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள்…

மேலும் படிக்க

“விஷால் தன்னை பெரிய ஆள் என்று எண்ண வேண்டாம்” என்று கடும் கண்டனத்துடன் நீதிபதி கருத்து..!!

மதுரை சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை லைக்கா நிறுவனம் திருப்பிக்கொடுத்தது. அதற்கு பதில், பணத்தை திருப்பித்தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி, தான் தயாரித்த வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தை லைக்கா நிறுவனத்துக்கு வழங்காததால், விஷாலுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் லைக்கா வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,…

மேலும் படிக்க

ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவுக்கு நிலங்களை வழங்கியவர்களின் வாழ்வாதாரம்..?!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஒரு தனித்தீவில் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து தான் ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகின்றன. ஆந்திரா-தமிழக கடல் எல்லையில் சென்னைக்கு வடக்கே சுமார் 43 மைல்தூரத்தில் இஸ்ரோ மையம் உள்ளது. இதற்காக கடந்த 1969-ம் ஆண்டு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. கிழக்கு நோக்கிய ஏவுதிசை, பூமியின் சுழற்சி, மத்திய நேர்க்கோட்டிற்கு நெருக்கமான இடம் மற்றும் அதிக…

மேலும் படிக்க

சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை..??!!

சென்னையில் தொடர்ந்து 490-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது..!!

தெற்கு ரெயில்வேயில் சென்னை – மைசூர், சென்னை – கோவை, திருவனந்தபுரம் – காசர்கோடு இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை எழும்பூர் – நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 முதல் 11.30 மணிக்குள் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இதற்கான விழா ஏற்பாடு நடந்து வருகிறது. 25-ந்தேதி முதல் சென்னையில் இருந்து…

மேலும் படிக்க

கோட்டகுப்பம் அருகே சாலை தடுப்பு மீது மோதி அரசு விரைவு பஸ் விபத்துக்குள்ளானது..!!

அரசு விரைவு பஸ் ஒன்று இன்று காலையில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கோட்டகுப்பம் அருகே வந்த போது திடீரென பஸ் சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது..!!

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூ.79.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.44,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram