இன்ஸ்டாவில் பகிரப்பட்ட ட்ரை ப்ரூட் பீட்சா வீடியோவுக்கு பார்வையாளர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்..!!

உர்மில் படேல் என்பவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ரொட்டியை இரு துண்டுகளாக வெட்டி அதன் மீது தக்காளி சாஸை ஊற்றுகிறார். பின்னர் முந்திரி, திராட்சை மற்றும் சீஸ் ஆகியவற்றை அதன் மேல் உற்றுகிறார். பின்னர் அது oven இல் வைத்து லேசாக சூடாக்கப்படுகிறது.இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில், பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். புதிய வகை உணவு செய்வது வரவேற்க தகுந்த செயல்தான். ஆனால் இப்படியா என…

மேலும் படிக்க

மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கொலை..!!

மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புகைபடங்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், புகைபடங்களில் பிணமாக கிடந்த இருவரும் மெய்தி இனத்தைச் சேர்ந்த 17,19 வயது மாணவர்கள் எனவும் கடந்த ஜூலை மாதம்…

மேலும் படிக்க

ஒரே டிக்கெட் முறையை கொண்டு வரும் திட்டம் தொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் கடிதம்..!!

சென்னையில் தினந்தோறும் மக்கள் பயணம் செய்யும் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் என மூன்றுக்கும் ஒரே டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இதற்கான டெண்டர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரே டிக்கெட் முறையை கொண்டு வரும் திட்டம் தொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில் புறநகர் ரெயில்களில்…

மேலும் படிக்க

டிக்கெட்டிலும், அடையாள அட்டையிலும் வெவ்வேறு பெயர்கள் இருந்ததால் மதுரை செல்ல வந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து விமான நிறுவன அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்..!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்வதற்காக மதுரையை சேர்ந்த சர்மேஷ் கான் என்பவர் வந்தார். மாலை 4.55 மணிக்கு செல்லக்கூடிய விமானத்தில் டிக்கெட் ஆன்லைன் மூலமாக எடுத்திருந்தார். சென்னை விமான நிலைய புறப்பாடு பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விமான டிக்கெட்டை பரிசோதித்து விட்டு சர்மேஷ்கானை உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்ற சர்மேஸ்கான், டிக்கெட் புக்கிங் அலுவலகத்துக்கு சென்று ஆன்லைன் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து இருந்தார்.அவர் விமானத்தில் ஏறுவதற்கு…

மேலும் படிக்க

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 29-ம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாகக்கூடும்..!!

வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் 30-ம் தேதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், அது தற்போது ஒருநாள் முன்னதாக அதாவது வரும் 29ஆம் தேதி உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் 29-ம் தேதி உருவாகவிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாள்களுக்குள் மேலும் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

குஜராத் : ஆற்றை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..!!

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை இந்த பாலத்தில் வாகனங்கள் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இரு துண்டாக உடைந்து ஆற்றில் விழுந்ததால், அதன் மீது சென்றுகொண்டு இருந்த குப்பை லாரி, இருசக்கர வாகனங்களும் ஆற்றில் விழுந்தன. உடனடியாக…

மேலும் படிக்க

சிங்கப்பூரில், இந்திய பெண் என நினைத்து சீன வாடகை கார் ஓட்டுநர் இனவெறியுடன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..!!

சிங்கப்பூரில் வசித்து வரும் ஜேனெல்லே ஹீடன் (வயது 46) என்ற பெண் தன்னுடைய 9 வயது மகளுடன் வாடகை கார் ஒன்றில் புறப்பட்டார். ஆன்லைன் வழியே முன்பதிவு செய்து சென்ற அந்த வாடகை காரில், சீனாவை சேர்ந்த ஓட்டுநர் இருந்துள்ளார். அவர்கள் செல்லும்போது வழியில், பசீர் ரிஸ் என்ற இடத்தில், மெட்ரோ கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்காக சாலை மூடப்பட்டு இருந்தது. இதனால், கோபமடைந்த அந்த ஓட்டுநர் பின்னால் திரும்பி, காரில் அமர்ந்திருந்த பெண்ணை நோக்கி…

மேலும் படிக்க

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடப்படுகிறது..!!

வருகிற 28-ந்தேதி மிலாடி நபி தினம் மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் ஆகியவை மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினங்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ள கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருகிற 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி ஆகிய நாட்களில் தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் உரிமம்…

மேலும் படிக்க

நீலகிரி : கூடலூர் பகுதியில் வனவிலங்களை வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்..!!

ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் இரண்டு வாகனத்தை நிறுத்திவிட்டு இளைஞர்கள் ஆயுதங்களுடன் வனப்பகுதி சென்றதாகதகவல் கிடைத்தது. இதனையடுத்து பத்துக்கு மேற்பட்ட வனத்துறையினர் வனப்பகுதிக்குள் ஆய்வு மேற்கொண்டனர். வனத்துறையினரை பார்த்ததும் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு இருந்தவர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர். அவர்களில் ஒருவர் தப்பியோடிய நிலையில் 5 பேரை பிடித்துள்ளனர். அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் வனச் சட்டத்தின் கீழ் கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

சிவகங்கை : பேருந்து நிலையத்தினுள் கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கியதால் குளம் போல் பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது..!!

தமிழகத்தை வாட்டி வதைத்த வெயில் சற்றே தணிந்து மழை பெய்ய துவங்கி உள்ளது.சிவகங்கை மாவட்டத்திலும் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலையில் சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சிவகங்கை நகர் முழுவதும் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதைபோல் பேருந்து நிலையத்தினுள்ளும் மழைநீர் குளம் தேங்கியது.வெளியேற போதிய இடவசதியின்மையினால் மழைநீர் தேங்கியது.இதனால் பள்ளி விட்டு வந்த மாணவ,மாணவிகள் தண்ணீரில் நனைந்தப்படியே சென்றனர். NEWS…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram