மனைவி அளித்த குற்றச்சாட்டின் பேரில் வாலிபருக்கு மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து கடுமையாக தாக்கி உள்ளனர்..!!

பீகாரின் கதிகார் மாவட்டத்தில் கபார் கிராமத்தில் மாவு மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக ராஜீவ் குமார் இருந்து வருகிறார். இந்த மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ஆனந்த். இந்நிலையில், காலப்போக்கில் ராஜீவின் மனைவிக்கும், ஆனந்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன்பின்னர் இருவரும் மொபைல் போன் வழியே உரையாடி வந்துள்ளனர். இந்த நிலையில், திடீரென ஒரு நாள் ஆனந்துக்கு எதிராக ராஜீவின் மனைவி குற்றச்சாட்டு கூறியுள்ளார். கடந்த 3 மாதங்களாக ஆனந்த் தன்னை துன்புறுத்தி வந்துள்ளார் என்றும்,…

மேலும் படிக்க

2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது : ரிசர்வ் வங்கி..!!

2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வங்கி கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். இந்தநிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் தற்போது வரை 93% நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. திரும்ப பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 76% வைப்புத் தொகையாகவும் 13% மற்ற…

மேலும் படிக்க

மத்திய பிரதேசத்தின் சாகர் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் கடைக்காரர்கள் சிலர், ஒரு பெண்ணை ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம்..!!

பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை தரையில் படுக்க வைத்துவிட்டு அருகில் அமர்ந்துள்ளார். அங்கு அமரக்கூடாது எனக் கூறி ஒருவர் அந்த பெண்ணை தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். மற்றொருவர் அந்த பெண்ணை எட்டி உதைத்துள்ளார். வலி தாங்காமல் அழுத அந்த பெண்ணை இன்னொருவர் கம்பியால் அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி…

மேலும் படிக்க

ஐதராபாத்தில் தனது மனைவியுடன் தங்கி இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்..!!

பாகிஸ்தானின் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தைச் சேர்ந்த பயாஸ் முகமது என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்காக சென்றுள்ளார். அங்கு இந்தியாவைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவருடன் பயாஸ் முகமதுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பயாஸ் முகமதின் மனைவி இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இதைத்…

மேலும் படிக்க

கொடைரோடு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்..!!

கொடைரோடு அருகே உள்ள அழகம்பட்டியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 48). விவசாயி. அவருடைய மனைவி ருக்குமணி. இவரிடம், மதுபானம் குடிப்பதற்காக அழகேசன் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மனம் உடைந்த அழகேசன், கடந்த 29-ந்தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகேசன் நேற்று பரிதாபமாக இறந்தார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

நிலவின் தென் துருவத்தில் ரோவர் சுழன்று சுழன்று புதிய ஆய்வுகளை செய்து வருகிறது..!!

நிலவின் தென்துருவத்தை அலசி ஆராய ‘சந்திரயான்-3’ விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியதில் இருந்து, ரோவர் எடுத்த அபூர்வமான புகைப்படங்களை எல்லாம் இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. எந்த நாடும் தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் ஊர்ந்து சென்ற காட்சியும் இந்தியர்களை ஆனந்தத்தில் பெருமை கொள்ள செய்தது. குறிப்பாக நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் பள்ளம் பள்ளமாக காட்சியளிக்கும் நிலாவை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது….

மேலும் படிக்க

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 468-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram