நடிகை ‘விஜயலட்சுமி’ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ‘சீமானிடம்’ விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர்..!!

நடிகர் விஜய் நடித்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படி புகார் கொடுத்தார். இதுகுறித்து…

மேலும் படிக்க

 ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘கார்கி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த “ஆர்.எஸ்.சிவாஜி” காலமானார்..!!

நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், 1989ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ஜனகராஜுடன் சேர்ந்து இவர் பேசும் ‘எங்கேயோ போய்ட்டீங்க சார்’ என்ற வசனம் மிகவும் பிரபலம்.இன்று (செப்.,02) காலை உடல்நலக்குறைவு காரணமாக ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்….

மேலும் படிக்க

“Live-In Relationships” இந்தியாவில் திருமண அமைப்பை அழிக்க முயற்சி..!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அளித்த புகாரின் பேரில் அட்னான் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த இளம் பெண், அட்னான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், அதன் காரணமாகவே அவரோடு ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், தற்போது தான் கருவுற்றிருப்பதாகவும், ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.கைது செய்யப்பட்ட அட்னான் ஜாமீன் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை…

மேலும் படிக்க

சூரியனை நோக்கிய தனது நீண்ட பயணத்தை ‘ஆதித்யா எல்-1’ விண்கலன் வெற்றிகரமாகத் தொடங்கியதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்..!!

இன்று காலை 11.50 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டத்தில் இருந்து முதல் 63 நிமிடங்கள் மிக முக்கியமானதாக, சவால் நிறைந்ததாக இருந்தது. ராக்கெட் தனது பல்வேறு படிநிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்த நிலையில் 63 நிமிடங்களுக்குப் பின்னர் மிஷன் வெற்றியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இஸ்ரோ மையத்தில் பேசிய அவர், “ஆதித்யா எல்-1 விண்கலன்…

மேலும் படிக்க

பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் மோதிய வாலிபரும் இறந்தார்..!!

காட்பாடி கிளித்தான்பட்டரை அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (வயது 17), தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த மோட்டார் சைக்கிள் தனுஷ் மீது மோதியதில் மாணவன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த எல்.ஜி.புதூர் கிராமத்தை சேர்ந்த கதிரவன் (வயது 19) படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு…

மேலும் படிக்க

தாயிடம் போதையில் தந்தை தகராறில் ஈடுபடுவதாக கூறி காவல்துறை குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் 13 வயது சிறுவன் மனு..!!

தாயிடம் போதையில் தந்தை தகராறில் ஈடுபடுவதாக கூறி காவல்துறை குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் 13 வயது சிறுவன் மனு கொடுத்தது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பரானா. இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். ஜாபர் குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜாபர் குடித்துவிட்டு வந்து மனைவி பரனாவிடம் போதையில் தகராறு செய்து…

மேலும் படிக்க

சிறு பாலம் கட்ட தோண்டியபோது காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து குடிநீர் ஆறாக ஓடுகிறது..!!

ராணிப்பேட்டையில் சிறு பாலம் கட்ட தோண்டியபோது காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து குடிநீர் ஆறாக ஓடுகிறது. இதனை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்காதது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், வாலாஜாப்பேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் கிராமப்பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ராணிப்பேட்டை வக்கீல் தெருவின் முடிவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் கால்வாயை கடக்க சிறுபாலம் அமைக்கும்…

மேலும் படிக்க

கிணற்றில் இளம்பெண் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை..!!

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகள் ராசாத்தி (வயது 22). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினர். இந்த நிலையில் நேற்று காவேரிப்பாக்கத்தில் உள்ள கட்டளை பாட்டை தெருவில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ராசாத்தி பிணமாக மிதப்பதை கண்ட…

மேலும் படிக்க

தனித்து போட்டியா..?! அல்லது கூட்டணி அமைத்து போட்டியா..?! வெளிநாட்டில் இருந்து ‘கமல்ஹாசன்’ திரும்பியதும் முடிவு..!!

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில், மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நியூஸ் 7 தமிழ் சென்னை மண்டல தலைமைச் செய்தியாளர் சிரில் தேவாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. பாஜக அரசு மாற்றப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கக்கூடாது என கமல்ஹாசன் கருதுகிறார். காங்கிரஸ் தான் மாற்று என எண்ணத்தில் கமல் உள்ளார். ராகுல் காந்தியுடன் இணக்கமாகவும் இவர் இருக்கிறார். தேர்தலில் கூட்டணியா?…

மேலும் படிக்க

சிங்கப்பூர் : அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த ‘தர்மன் சண்முகரத்னம்’ அமோக வெற்றி பெற்றுள்ளார்..!!

1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது தாத்தா இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற கிராமத்தை சேர்ந்தவர். தர்மனின் தந்தை கே. சண்முகரத்னம் மருத்துவப் பேராசிரியர். தர்மன் சண்முகரத்னம் ஜப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார்.சிங்கப்பூரில் ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி பயின்ற தர்மன், லண்டன் கேம்பிரிட்ஜ் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் பயின்றார். ஒரு பொருளாதார நிபுணரான தர்மன், சிங்கப்பூருக்கான அரசு சேவையில், முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram