மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்டதாக தணிக்கை வாரியத்தின் மீது நடிகர் விஷாலின் குற்றச்சாட்டிற்கு நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..!!

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழு முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்கில்…

மேலும் படிக்க

வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்துவிட்டதாகவும், வலிகளுடன் வாழ பழகிக் கொண்டிருப்பதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார் : நடிகர் விஜய் ஆண்டனி..!!

சென்னை வடபழனி பிரசாத் லேபில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, நடிகைகள் மகிமா நம்பியார், நந்திதா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.தனது இளைய மகள் லாராவுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர் அமுதனுக்கும் தனக்கும் நீண்ட நாள் நட்பு தொடர்வதாக தெரிவித்தார். மேலும் ‘ரத்தம்’ திரைப்படத்தின் மூலம் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நீண்ட…

மேலும் படிக்க

பாகிஸ்தான் : மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் பலியாகினர்..!!

பலூசிஸ்தானில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதியின் அருகேதான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மஸ்துங் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்தார். மிலாடி நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதிப்பும் அதிகமாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நகர நிலைய அலுவலர் முகமது ஜாவேத் லெஹ்ரி கூறுகையில், “நடந்தது தற்கொலைப் படை தாக்குதல். டிஎஸ்பியின்…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 28) சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43,280-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை 0.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.76,500 ஆக இருக்கிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,410-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு…

மேலும் படிக்க

மல்லிகைப்பூ மகசூல் 80% பாதிப்பு : கிருஷ்ணகிரி..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைக் கொட்டாய், மலையாண்டஅள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் மல்லிகைப் பூ அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் பறிக்கப்பட்டு, சரக்கு வாகனங்கள் மூலம் உள்ளூர் மற்றும் ஓசூர், பெங்களூரு மலர் சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில்,பெங்களூருவில் சந்தையில் அதிகாலையில் செல்லும் பூவுக்கு அதிக விலை கிடைப்பது உண்டு. மேலும், இங்கு…

மேலும் படிக்க

கிண்டி சிட்கோ அலுவலகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து வேலைநிறுத்தம்..!!

புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனத்தினர் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக 12 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சென்னை கிண்டி சிட்கோ அலுவலகத்தில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தொழில்துறை செயலாளர் அருண் ராய், தொழில் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ், மின்வாரிய…

மேலும் படிக்க

ஆமதாபாத் : சயின்ஸ் சிட்டியில் நடந்த ரோபோ கண்காட்சியை “பிரதமர் மோடி” பார்வையிட்டார்..!!

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் சயின்ஸ் சிட்டிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அவர் ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். குஜராத்தில், 22 மாவட்டங்களில் கிராமப்புற வைபை வசதிகள் உள்பட ரூ.5,206 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அவர் சோட்டா உதேப்பூரில் தொடக்கி வைக்க உள்ளார். இந்த வைபை வசதிகளால் 7,500 கிராமங்களை சேர்ந்த 20 லட்சம் பேர் பயனடைவார்கள்….

மேலும் படிக்க

சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்பாலை உற்பத்தியாளர்கள் அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட நூற்பாலைகள்,பருத்தியிலிருந்து கொட்டையை பிரித்தெடுக்கும் ஜின்னிங் ஆலைகள், கழிவு பஞ்சை சுத்திகரிக்கும் வில்லோ ஆலைகள்,பஞ்சில் இருந்து பருமனான நூல் தயாரிக்கும் ஆலைகள் என பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளை நம்பியே நேரடியாகவும்,மறைமுகமாகவும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்ப்டுகையில் தற்போதைய மின் கட்டணம் 430 விழுக்காடு வரையில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பீக் ஹவர்ஸ் என்ற சொல்லக்கூடிய…

மேலும் படிக்க

‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை..!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’ இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது….

மேலும் படிக்க

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்..!!

திண்டிவனம் தாலுகா சாரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 49). இவர் மீது ஒலக்கூர் பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 20.8.2023 அன்று சாரம் பகுதியில் உள்ள ஓட்டலின் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக பெருமாளை ஒலக்கூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, பெருமாள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய செயல்களை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram