தீராத வயிற்று வலியால் அவதியடைந்த கொத்தனார் விஷ விதைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 31), கொத்தனார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட திருநாவுக்கரசு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி தீரவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் கடந்த மாதம் 28-ந் தேதி விஷ விதைகளை தின்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு வேப்பூர் அரசு…

மேலும் படிக்க

வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் நிலை தடுமாறி விழுந்த கல்லூரி மாணவர் மீது அரசு பஸ் சக்கரம் ஏறியது..!!

திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் நிலை தடுமாறி விழுந்த கல்லூரி மாணவர் மீது அரசு பஸ் சக்கரம் ஏறியது. இதில் அவர் பலியானார். திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த குப்பையங்காடு பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவருடைய மகன் சபரீஷ் (வயது 17). இவர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி நேற்று விடுமுறை என்பதால் இவர் வெளியே சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.திருப்பூர்…

மேலும் படிக்க

காவல்துறை சார்பில் பெண்கள், மாணவ- மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது..!!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இமைகள் திட்டத்தின்கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தோரணம்பதி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் தலைமை தாங்கினார். இதில் பெண்கள், குழந்தைகள், மாணவர்களுக்கு சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

வேலூரில் லாரிகள் மோதிய விபத்தில் பீகார் வாலிபர் பலியானார்..!!

சென்னையில் இருந்து கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை பீகாரை சேர்ந்த வாலிபர் ஓட்டினார். அதில் பீகார் மாநிலம் கான்பூரை சேர்ந்த மோதிலால்குமார் (வயது 35) கிளீனராக இருந்தார். அதிகாலை 3 மணியளவில் வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் லாரி சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்னால் லாரி மோதியது. தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று மோதிலால்குமார் உடலை கைப்பற்றி…

மேலும் படிக்க

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடிச்சென்று விட்டனர் : வேலூர்..!!

குடியாத்தம் அடுத்த கல்மடுகு கிராமம் அண்ணாதெருவை சேர்ந்தவர் சந்தியா (வயது 30). இவரது கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து சந்தியா தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியாவின் தாயார் இறந்து விட்டார். இதனால் தினமும் மாலையில் வீட்டை பூட்டிக்கொண்டு அதே கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று தந்தை வெங்கடேசனுக்கு சமையல் செய்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம். அதன்படி பெற்றோர்…

மேலும் படிக்க

‘ஜவான்’ படம் ரிலீசாகும் முதல் நாளுக்கான முன்பதிவில் சுமார் 7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை..!!

அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் 7ஆம் தேதி வெளியாகிறது. இந்த படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400…

மேலும் படிக்க

பழநியில் ‘தக்காளி’ ரூ.10-க்கு விற்பனை..!!

பழநியில் வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனையானது. விலை வீழ்ச்சியால் தக்காளியை விவசாயிகள் குப்பை கொட்டிச் சென்றனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், பழநி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளின் வசதிக்காக ஒட்டன்சத்திரம், பழநி என அந்தந்த பகுதிகளிலேயே தக்காளி மொத்த மார்க்கெட் இயங்கி வருகிறது. தற்போது அனைத்து பகுதிகளில் இருந்தும் அறுவடை செய்யப்பட்ட தக்காளி, மார்க்கெட்டுக்கு அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகம் காரணமாக விலை வெகுவாக…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 06) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி விலை 0.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.78,500 ஆக இருக்கிறது.அதனைத் தொடர்ந்து பெரிய…

மேலும் படிக்க

 தோனி இல்லாத இந்திய அணியின் ஃபினிஷர்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இல்லாமல் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் களம் காண்கிறது இந்திய அணி. இந்நிலையில் அவர் இல்லாத பட்சத்தில் இந்திய அணியின் ஃபினிஷர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 05) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,360-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை ரூ.1.00 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram