ராமநாதபுரம் : தியாகி இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் உருவச் சிலை..!!

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். ரூ.3 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு சார்பில் இந்த மணிமண்டபம் கட்டப்படும். அவர், கடந்த 1942-ம் ஆண்டு வெள்ளையர்களை எதிர்த்து வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டவர். இதனிடையே, இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி…

மேலும் படிக்க

தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்களை போலீசார் கைது செய்தனர் : சென்னை..!!

ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆவடி போக்குவரத்து போலீசார் உதவியுடன் ஆவடி எச்.வி.எப். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிக்கொண்டிருந்த 3 எருமை கன்றுகள் மற்றும் அண்ணனூர் 60 அடி சாலையில் சுற்றித்திரிந்த 2 மாடுகள் ஆகியவற்றை பிடித்து சோழம்பேடு ரோட்டில் ஆவடி மாநகராட்சி சார்பில் பராமரித்து வரும் கொட்டகையில் அடைத்தனர். இதையடுத்து சுமார் 50 பேர் அதிரடியாக அங்கு வந்து மாட்டு தொழுவத்தில் அடைத்து…

மேலும் படிக்க

சென்னை : விமானத்தில் பயணம் செய்த தமிழக பயணி நடுவானில் மாரடைப்பினால் பலியானார்..!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு மஸ்கட்டில் இருந்து விமானம் வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்த போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் (வயது 38) என்ற பயணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை கண்ட விமான பணிப்பெண்கள், விமானிக்கு தகவல் கொடுத்தனர். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, பயணியின் உடல் நலம் குறித்து கூறி மருத்துவ குழுவை தயாராக இருக்கும்படி தெரிவித்தார். அந்த விமானம், சென்னையில் தரை இறங்கியவுடன்…

மேலும் படிக்க

“இந்தியாவில் எந்த பெயரை யார் வைத்தார்கள் என்பது தேவை இல்லாத ஆணி” : சித்தார்த்..!!

உலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்பட்டுவருகிறது. தற்கொலை செய்து கொள்வதைத் தவிர்ப்பதற்கும் அதைத் தடுப்பதற்கும்மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசும் மற்றும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக மாரத்தான் ஓட்டம், வாக்காத்தான் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளி வளாகத்தில் சினேகா தற்கொலை தடுப்பு மையம் சார்பில் ”தற்கொலை என்பது ஒரு தீர்வு…

மேலும் படிக்க

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது..!!

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மராகேஷ் அருகே 18.5 கிலோமீட்டர் ஆழத்திற்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் 2 ஆயிரத்து 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம்…

மேலும் படிக்க

மலபார் கோல்டு அண்டு டைமண்ட் ஜூவல்லரியில் ‘நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் திருவிழா’..!!

மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி. அகமது கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஷோரூம்களிலும் நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. வரும் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் இடம் பெற்றுள்ள பல்லாயிரக்கணக்கான கம்மல், இயற்கையான கற்கள், சான்றளிக்கப்பட்ட நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட நகைகள் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். அந்த அளவுக்கு அவை தரமான நகைகளாகும். நியாயமான விலை, திரும்ப வாங்கிக் கொள்ளும் உத்தரவாதம் ஆகியவை அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும்….

மேலும் படிக்க

“ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள்” உலக தற்கொலை தடுப்பு நாளில் : கமல்ஹாசன்..!!

உலகம் முழுவதும் தற்கொலை சம்பவங்கள் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தனிப்பட்ட காரணங்கள், குடும்ப காரணங்கள் என பல்வேறு காரணங்களுக்காக பலர் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து வருகின்றனர்.எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு கிடையாது. தற்கொலையால் எந்த பிரச்சினையும் தீரப்போவதில்லை. தற்கொலையை தடுக்கும் வகையில் உலக நாடுகள் உலக சுகாதார அமைப்புடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 2003ம் ஆண்டு முதல் செப்டம்பர் 10ம்…

மேலும் படிக்க

தமிழகத்தில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 10-09-2023 மற்றும் 11-09-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில்…

மேலும் படிக்க

சந்தவாசல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொைல..!!

சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 47), கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி உடல் நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி மதியம் இவர் பயிருக்கு வைத்திருந்த பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முருகனின் மனைவி சுமதி சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். NEWS…

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தர்பூசணி வியாபாரியிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரணை..!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா உலகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இதை தெரிந்து கொண்ட கீழ்பென்னாத்தூர் தாலுகா வேட்டவலம் பாரதி தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ராஜேந்திரனை அணுகி நானும் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், தன்னுடைய கடைக்கு தர்பூசணி பழம் அனுப்பி வைக்குமாறு கேட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து ராஜேந்திரன் கடந்த 14.2.2022 முதல் 12.4.2022 வரை பாலகிருஷ்ணனின் பழக்கடைக்கு 19 லோடு தர்பூசணி பழம் அனுப்பி உள்ளார். ரூ.5…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram