அடுத்த 15 நாட்கள் தமிழகத்திற்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது..!!

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாடு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேவேளையில், வழக்கமான நடைமுறையின்படி தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்றும் கர்நாடக அணைகளில் தண்ணீர் மோதுமான அளவில் இல்லை என்றும் கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.இந்த நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு…

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகத்தில் இந்து சமயம் மற்றும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன..!!

சனாதன தர்மத்திற்கு எதிராக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் தொடர்ந்து விவாதப்பொருளாகி உள்ளது. சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசிய அவர், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். இதனால் அவரை இந்து அமைப்பினரும், பாஜகவினரும் தொடர்ந்து விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சை நியாயப்படுத்துவதுடன், சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை என்றார். இந்த விவாதம் ஒருபுறமிருக்க, தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகத்தில்…

மேலும் படிக்க

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒருவரும் நேற்று (செப்.11) ஒருவரும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இறந்த இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். இதற்கு நிபா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கருதி உயிரிழந்தவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. இன்று மாலை சோதனை முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சோதனையில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இத்தகவலை…

மேலும் படிக்க

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடினார்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அண்மையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக இன்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அவ்வப்போது வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் பயணம் செய்வது வழக்கம். மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு…

மேலும் படிக்க

10 ஆண்டுகளுக்கு பிறகு ‘இயக்குநர் செல்வராகவனுக்கு’ நடிகை ‘த்ரிஷா’ அளித்துள்ள ரிப்ளை இணையத்தில் வைரலாகி வருகிறது..!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான இவர், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் என குறிப்பிட்ட இடைவெளியில் வெற்றி படங்களை ரசிகர்களுக்கு வழங்கினார்.இவரது இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’. இதில் கதாநாயகனாக நடிகர் வெங்கடேஷ், கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தனர்….

மேலும் படிக்க

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக ஒரு கோடியே 6 லட்சம் பேர் தேர்வாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், தகுதி வாய்ந்தவர்களுக்கான உரிமைத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் என தெரிவித்தார். தகுதிபெற்ற குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சேர்க்க…

மேலும் படிக்க

சென்னை அருகே நடந்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக மிகவும் வருந்துவதாக, இசையமைப்பாளர் ‘ஏ.ஆர்.ரஹ்மான்’..!! 

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்.10) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என பல்லாயிர ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 11) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,120-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை 0.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ…

மேலும் படிக்க

சோழீஸ்வரர் கோவிலில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடத்தி வைத்தார்..!!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை-எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி நடத்தி வைக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் நேற்றுகாலை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமாங்கல்யம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, மிக்சி உள்பட பல்வேறு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன….

மேலும் படிக்க

விலை குறைவால் உடுமலை பகுதியில் சாலையோரம் தக்காளி கொட்டப்பட்டுள்ளது..!!

உடுமலை பகுதியில் ஆண்டு முழுவதும் பல்வேறு பட்டங்களில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் காரணமாக தக்காளி சாகுபடி பரப்பளவு குறைந்ததோடு, உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளியின் விலை மளமளவென உயர்ந்து கிலோ ரூ.180-க்கும் மேலாக விற்பனையானது. அதைத் தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடிக்கு திரும்பினார்கள். அதன் பயனாக உற்பத்தியும் அதிகரித்தது. இதனால் அதன் விலையும் படிப்படியாக குறைந்து…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram