நடிகர் அசோக் செல்வன் – நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலியில் இன்று  நடைபெற்றது..!!

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பலவேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான ‘போர்தொழில்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் அசோக் செல்வனுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் ’சிதம்பர ரகசியம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்’ உள்பட…

மேலும் படிக்க

ஆகஸ்ட் மாதத்துக்கான சில்லறை பணவீக்கம் குறைந்தது..!!

நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் சற்றே குறைந்து 6.83 சதவீதமாக உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44 சதவீதமாக அதிகரித்த நிலையில் தற்போது சற்றே குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. ஆனால் உணவு விலை அதிகரிப்பு 10 சதவீதத்தை சுற்றியே நிலவுகிறது. ஒவ்வோர் ஆண்டும் காய்கறி விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலையில் காய்கறி விலைவாசி 37.4 சதவீதம் அதிகரித்திருந்த…

மேலும் படிக்க

சென்னை : சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது..!!

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது 9 வயது மகள் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக சோர்வாகவும் பதற்றமாகவும் இருந்ததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.விசாரணையில் சிறுமியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து வேன் டிரைவர் ரமேசை (வயது 48) போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து கோர்ட்டில்…

மேலும் படிக்க

கடலூரில் தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழந்தது..!!

கடலூர் மாவட்டம் அழகியநத்தம் பகுதியை சேர்ந்த 3 மாத ஆண் குழந்தைக்கு, கலையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நள்ளிரவில் குழந்தைக்கு வயிறு உப்பியதாக கூறி, கடலூர் அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

கம்பத்தில் எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சியில் தி.மு.க.வினர் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..!!

தேனி மாவட்டம் கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு சைக்கிளை வழங்கினார். இதில், கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் கலந்துகொண்டார். முன்னதாக பள்ளி ஆசிரியர் வரவேற்புரை ஆற்றியபோது, எம்.எல்.ஏ. பெயரை தொடர்ந்து நகராட்சி தலைவர் பெயரை கூறாமல் தி.மு.க. கட்சி நிர்வாகிகளின் பெயரை கூறினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார்….

மேலும் படிக்க

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது..!!

நடிகர் விஜய் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் ‘நா அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் ஜேசன் சஞ்சய்யின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்புக்காக வெளிநாடு சென்றார். தொடர்ந்து பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், சஞ்சய்யை கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்கு ஒருமுறை கதை சொல்லியிருந்தார். ஆனால், நடிப்பில் ஈடுபாடில்லை என்றும் இயக்குநராக விரும்புவதாகவும் கூறிய சஞ்சய், சில…

மேலும் படிக்க

டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க மத்திய அரசு முன்மொழியவில்லை ~ நிதின் கட்கரி..!!

நாட்டில் டீசல் கார்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரை செய்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் நாட்டில் டீசல் வாகனங்களினால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதால் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரைத்துள்ளார் என்றும் தகவல் வெளியானது….

மேலும் படிக்க

40% எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவை..!!

மக்களவை மற்றும் மாநிலங்களவையின் மொத்தமுள்ள 776 எம்பிக்களில் 763 பேர் தங்கள் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்துள்ள தகவல்களின் அடிப்படையில், பல்வேறு புள்ளி விவரங்களை ஏடிஆர் அமைப்பு திரட்டியுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 40% எம்பிக்கள் (306 பேர்) மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 25% (194 பேர்) எம்பிக்கள் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்ற வழக்குள்ள…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 12) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,160-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை 0.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ…

மேலும் படிக்க

டெங்கு பரவல் தடுப்பு குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது : சென்னை..!!

சென்னையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு, டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சைகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram