பைனாப்பிள் மோமோ..!!ஒருவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்..!!
சிக்கன், மட்டன் மோமோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்று கூட கூறலாம். ஆனால் பைனாப்பிள் மோமோவை நீங்கள் ருசித்தது உண்டா? ஆம். இன்று இணையத்தில் பல விதமான மற்றும் சுவையான உணவு வகைகள் தொடர்பான வீடியோ நாள்தோறும் பதிவிடப்படுகிறது. அதனை பார்த்து உணவு தயாரித்து வீட்டில் உள்ளவர்களிடம் பாராட்டு பெறும் இல்லத்தரசிகள் உண்டு. உனக்கு வேற வேலை இல்லையா? நாங்க தான் கிடைத்தோமா என திட்டு வாங்குபவர்களும் உண்டு. ஜதின் குமார் என்பவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தெருவோர கடைக்காரர் ஒருவர் அன்னாசிப்பழ மோமோ தொடர்பான வீடியோ இடம்பெற்றுள்ளது.அந்த வீடியோவில் அன்னாசிப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கும் கடைக்காரர் பின்னர் அவற்றை மோமோவில் வைத்து ஆவியில்…