‘ஆகஸ்ட் 27’ முதல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படும்..!!

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 கி.மீ தொலைவிற்கு நான்காவது வழிதடவிரிவாக்கம் பணி ரூ.279 கோடி மதிப்பில் 7 மாத காலம் நடைபெற உள்ளது. இதன்காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் செல்லும் ரயில்கள்அனைத்தும் வரும் 27 ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டை நிலையத்தில் இருந்துவேளச்சேரிக்கு இயக்கப்படும். தற்போது தினமும் 122 ரயில்கள் சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதன் எண்ணிக்கை 80 ரயில்களாக குறைக்கப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலையத்தில்…

மேலும் படிக்க

தலைப்புகளை நீக்கும் ‘X’ ~ எலான் மஸ்க்..!!

’X’ (ட்விட்டர்) தளத்தில் புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளார் எலான் மஸ்க். அதன்படி, பயனர் பதிவிடும் கட்டுரைகளுக்கான இணைப்புகளில் (LINKS), முகப்பு படத்தை மட்டும் காட்சிப்படுத்திவிட்டு, அதற்கான தலைப்புகளையும், எழுத்துக்களையும் நீக்க X திட்டமிட்டுள்ளது. தற்போது பதிவிடப்படும் செய்தி இணைப்புகள், பயனர்களின் பக்கங்களில், படம், மூல முகவரி மற்றும் சுருக்கப்பட்ட தலைப்புடன், கார்டுகளாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இது, பயனர்களின் கட்டுரைகளுக்கு, அதிக பார்வைகளையும், பார்வையாளர்களையும் பெற்றுத் தருவதாக பலர் தெரிவித்துள்ளனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

‘சந்திரமுகி-2’ இசை வெளியீட்டு விழா..!!

கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில்  வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெறும் என…

மேலும் படிக்க

சந்திரயான்-3 வெற்றியைப் பாராட்டி இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி கடிதம்..!!

சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்வை “மகத்தான சாதனை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சோனியா காந்தி அனுப்பிய கடிதத்தில்,”நேற்று மாலையில் இஸ்ரோ நிகழ்த்திய மகத்தான சாதனையின்போது நான் எவ்வளவு பரவசத்துடன் இருந்தேன் என்பதை தெரிவிக்கவே இந்தக் கடிதம். இச் சாதனை அனைத்து இந்தியர்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு உற்சாகமும் பெருமையும் அளிக்கும் விஷயமாகும்….

மேலும் படிக்க

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரையில் தி.மு.க.வினர்..!!

மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசு மற்றும் கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி, சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கடந்த 20-ந்தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசினார். மதுரையில் மட்டும் அன்றைய தேதியில் உண்ணாவிரதம் நடைபெறவில்லை. அன்று…

மேலும் படிக்க

கோவில் உண்டியலில் 100 கோடி ரூபாய் காசோலை காணிக்கை..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அதுபோல் நேற்று கோவில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உண்டியலில் பக்தர் ஒருவர் ஒரு காசோலையை காணிக்கையாக போட்டு உள்ளார். அதில் ஒன்றல்ல.. இரண்டல்ல… “100 கோடி ரூபாய்” எழுதப்பட்டு இருந்தது. இதைபார்த்துதான் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அதன்பிறகு உயரதிகாரிகளுக்கு…

மேலும் படிக்க

நேபாளத்தில் சாலை விபத்தில் 6 இந்திய யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் பலி..!!

நேபாளத்தின் பாரா மாவட்டத்தல் நடந்த சாலை விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்மாண்டுவில் இருந்து ஜனக்பூருக்குச் சென்று கொண்டிருந்த பஸ், இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்றபோது, பாராவில் உள்ள சூரியாமை அருகே விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட மொத்தம் 27 பேர் பஸ்சில் இருந்தனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்..!!

கொசவப்பட்டி, செங்குறிச்சி துணை மின்நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் கொசவப்பட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தமாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, தவசிமடை, நொச்சிஓடைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, குரும்பப்பட்டி, கவராயப்பட்டி, செங்குறிச்சி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, எஸ்.குரும்பப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை…

மேலும் படிக்க

இலங்கை துறைமுகத்தில் மீண்டும் சீன கப்பலை நிறுத்துவது குறித்து பரிசீலனை..!!

இலங்கையில் ஹம்பன்தோட்டா துறைமுக பணிகள் உள்பட பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி தங்கள் கடற்படை கப்பல்களை அடிக்கடி இலங்கை துறைமுகங்களுக்கு சீனா அனுப்பி வருகிறது.அந்தவகையில் சீன கடற்படை உளவு கப்பல்களில் ஒன்றான ‘யுவான் வாங் 5’, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பல் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், அதை நிறுத்தி வைப்பதற்கு இலங்கையிடம் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக இந்த கப்பல் மூலம்…

மேலும் படிக்க

பிரபல பைக் ஷோரூமில் திடீர் தீ விபத்து..!!

ஆந்திர மாநிலம், விஜயவாடா, கே.பி நகர், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பைக் ஷோரூம் உள்ளது. விஜயவாடா மற்றும் கிருஷ்ணா மாவட்ட தலைமையகம் என்பதால் இங்கு ஏராளமான பைக்குகள் விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஷோரூம் முதல் தளத்தில் எலக்ட்ரீக் பைக்குகளும், கீழ் தளத்தில் பெட்ரோல் பைக்குகளும் நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் அதே வளாகத்தில் பைக் ஷோரூம் சர்வீஸ் சென்டரும் இயங்கி வந்தது. நேற்று இரவு ஷோரூம் ஊழியர்கள் முதல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram