நீலகிரி ~ நள்ளிரவு சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை கூட்டம் வழிமறித்த சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையானது அடர்ந்த வனப்பகுதி உள்ளடக்கிய சாலையாகும். இங்குள்ள வனப்பகுதியில் யானை, கரடி, குரங்கு உள்ளிட்ட பல அரிய வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவது வழக்கமாகும். ஆனால் யானை கூட்டம் எங்கும் நகராமல் அங்கேயே நின்றன. அப்போது பசியோடு தவித்து கொண்டிருந்த குட்டியானைக்கு தாய் யானை ஒன்று எவ்வித சலனமும் இன்றி பாலுட்டியது. சிறிது நேரத்திற்கு பின்னர் யானை கூட்டம் எவ்வித…

மேலும் படிக்க

திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும் ~ சென்னை உயர் நீதிமன்றம்..!!

பெண் டாக்டர் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி 80 பவுன் நகை, 68 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி பிரசன்னா என்ற சக்கரவர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் டாக்டர் தர்ப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதில், சக்ரவர்த்தி வயது முதிர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், விவகாரத்து ஆனவர்களை குறிவைத்து மோசடி செய்து வருகிறார். இதுவரை 17க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி…

மேலும் படிக்க

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ‘லைகா’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் ‘ரூ.1 கோடி’ நிதியுதவி..!!

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது..இறுதியில் படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன், நடிகர் ராகவா லாரன்ஸின்…

மேலும் படிக்க

 சோதனை விண்வெளிப் பயணம் அக்டோபரில் மேற்கொள்ளப்படும் ~ ஜிதேந்திர சிங்..!!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், “கரோனா தொற்று காரணமாக ககன்யான் திட்டம் தாமதமானது. ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஆளில்லா சோதனை விண்வெளிப் பயணம் முயற்சி செய்யப்படும். அதற்கு அடுத்ததாக, பெண் ரோபோ “வியோமித்ரா” விண்வெளிக்கு அனுப்பப்படும். இதனைத் தொடர்ந்தே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்படும். விண்வெளி வீரர்களை அனுப்புவது…

மேலும் படிக்க

“உனக்கு சினிமாவில் நடிக்க தகுதியே இல்லை என்று சொன்னார்கள்”..!!

 “சிறிது நாட்களுக்கு முன்னால் என்னை வரவிடாமல் கதவை பூட்டுப் போட்டு சாவியை தூக்கிவிட்டு போயிவிட்டார்கள். உனக்கு சினிமாவில் நடிக்க தகுதியே இல்லை என்று சொன்னார்கள்” என நடிகர் வடிவேலு பேசியுள்ளார். பி.வாசுவின் ‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் வடிவேலு, “ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும்போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால்…

மேலும் படிக்க

காலை சிற்றுண்டி திட்டத்தில் விலக்கு கோரும் ஆசிரியர்கள்..!!

தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பை ஆசிரியர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எல்.மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாட்டில் சமூக நீதியை பேணும் வகையிலும் ஏழை, எளிய நடுத்தர மாணவர்களின் பசியை போக்கும் வகையிலும், அந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக காலை சிற்றுண்டி உணவு திட்டம் என்ற சீரிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.அந்த திட்டத்தை கண்காணிக்க…

மேலும் படிக்க

காய்கறிகள் விலை உயரவில்லை..!!

கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையானது தமிழக விவசாயிகளுக்கும் ஆனந்தம் தருவதாகவே இருக்கும். ஏனென்றால் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான வியாபாரிகள் உடுமலை, பொள்ளாச்சி சந்தைகளுக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்வார்கள். மேலும் காய்கறிகளுக்கான தேவையும் அதிக அளவில் இருக்கும். இதனால் அனைத்து காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் ஓணத்தை கணக்கிட்டு விவசாயிகள் அதிக அளவில் காய்கறி சாகுபடி செய்வார்கள். அந்தவகையில் நடப்பு ஆண்டிலும் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி மேற்கொண்டுள்ளதால் தற்போது…

மேலும் படிக்க

மக்களிடம் மன்னிப்புக்கேட்ட பிரதமர் மோடி..!!

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதனிடையே, நடப்பாண்டில் ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. மேலும், ஜி20 கூட்டமைப்பின் பல்வேறு கூட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. வர்த்தகம், பாதுகாப்பு, சுற்றுல்லா உள்பட பல்வேறு துறைகள் தொடர்பான ஜி20 நாடுகளின் கூட்டம் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜி20 நாடுகளின் மந்திரிகள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஜி20 கூட்டமைப்பின் உச்சி…

மேலும் படிக்க

நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என அழைக்கப்படும்..!!

நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு அந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கி சாதனை புரிந்தது. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் இருந்து பெங்களூரூ திரும்பிய மோடி இஸ்ரோ மையத்திற்கு சென்று விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால் பதித்த அந்த நேரத்தில் நான் உணர்ந்த மகிழ்ச்சி அரிதானது. நான் ஒரு வித்தியாசமான மகிழ்ச்சியை உணர்கிறேன். இது போன்ற…

மேலும் படிக்க

‘கற்பனை’ உலகம் ஒன்றில் நடக்கும் காதல் கதையின் முடிவு ‘ரியாலிட்டி’யை நம்பியிருந்தால் அது “அடியே”..!!

பள்ளிக் காலத்திலிருந்து கவுரி கிஷனை காதலிக்கிறார் நடிகர் ஜி.வி.பிரகாஷ். அவர் தனது காதலை வெளிப்படுத்தும் போதெல்லாம் எதோ ஒரு பிரச்சினை குறுக்கிட்டுவிட, காதல் கரையைக் கடக்காமல் தவிக்கிறது. அப்படி ஒருநாள் கவுரியிடம் காதலை சொல்ல முயலும் ஜி.வி விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கண் விழித்துப் பார்த்தால் வேறு உலகத்தில் இருக்கிறார். அந்த உலகத்தில் கவுரியும், ஜிவியும் தம்பதியர்களாக வாழ்கின்றனர். தான் மல்டி யுனிவர்ஸுக்குள் வந்ததை அறியாத அவர், அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் தவிக்கிறார். ஒரு கட்டத்தில்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram