விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள வீரர்- வீராங்கனைகளுக்கு அழைப்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தேசிய விளையாட்டு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் 29-ந்தேதி காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஹாக்கி போட்டியும், 100 மீட்டர் ஓட்ட பந்தயமும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கைபந்து போட்டியும், 100 மீட்டர் ஓட்ட…