வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி காவல்துறைக்கு என்.எல்.சி. நிர்வாகம் கடிதம்..!!

நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 8-வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் இரவு-பகல் பாராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடன் கோட்டாட்சியர் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால்…

மேலும் படிக்க

விமான பயணத்தில் தூங்கிய “தோனி” ~ வைரல் விடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தல தோனி தனது தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் எல்ஜிஎம் என்ற படத்தை தயாரித்து திரைக்கு கொண்டு வந்துள்ளார். இதற்கான ப்ரமோஷன் பணிகள் சில தினங்களுக்கு முன்பு சென்னையிலும், ஹைதராபாத்திலும் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்பதற்காக தனது மனைவி சாக்‌ஷியுடன் தோனி சென்னை வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்து தன் மனைவியுடன் தோனி ராஞ்சிக்கு விமானத்தில் சென்ற…

மேலும் படிக்க

“விஜய்”க்கு தம்பியாக நடிக்கும் நடிகர் “ஜெய்” ~ ‘தளபதி 68’ அப்டேட்..!!

நடிகர் விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வருகிற அக்டோபர் மாதம் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக விஜய் நடிக்கும் ’தளபதி 68’ படம் குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றன. இன்னும்…

மேலும் படிக்க

தினசரி 1,000-க்கும் மேற்பட்டோின் கணக்குகளை முடக்கும் வங்கிகள்..!! அதிர்ச்சியில் பிரிட்டன் மக்கள்..!!

பிரிட்டனில் ‘டிபாங்கிங்’ எனப்படும் வங்கி மோசடி ஒன்று அரங்கேறியுள்ளது. அதன்படி அங்கு இயங்கும் பல வங்கிகள் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரித்து, வங்கிகளின் இந்த நடவடிக்கையால் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து சுதந்திரக் கட்சி (யுகேஐபி) தலைவர் நைஜெல் ஃபரேஜ், இந்த ஊழலை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்றுவலியுறுத்தியுள்ளதோடு, கணக்கு முடக்கப்பட்டவர்களின் சார்பில் பிரச்சாரம்…

மேலும் படிக்க

தன்னை போல் நடித்ததால் ஆள் வைத்து அடித்தார் வடிவேலு..! காதல் பட நடிகர் பகிர்ந்த தகவல்..!!

மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் நடிப்பில் தயாரான ‘சந்திரமுகி – 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ‘காதல்’ சுகுமார் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பெட்டியில் தனது சினிமா வாழ்க்கை குறித்த பல்வேறு சுவாரஷ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டுள்ளார். குறிப்பா அதில் நடிகர் வடிவேலுவால் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். தற்போது…

மேலும் படிக்க

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்..!!

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். வருவாய்த்துறையின் மூலமாக சுதந்திர போராட்ட தியாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கு விழா அழைப்பிதழ் அனுப்பும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். சிறப்பு விருந்தினர், தியாகிகள், அரசு அலுலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சுதந்திர தின விழா…

மேலும் படிக்க

அரியானா குருகிராம் பகுதியில் மீண்டும் வன்முறை : பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!!

அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நேற்று நடந்தது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் தொடர்ந்தது. ஆனால் இந்த மாவட்டத்தின் கேட்லா மோட் பகுதியில் ஊர்வலம் சென்றபோது மற்றொரு பிரிவை சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையே பயங்கர வன்முறை வெடித்தது. இரு தரப்பும் கற்களை…

மேலும் படிக்க

புதிய விமானங்களை இறக்குமதி செய்ய ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்கு டி.ஜி.சி.ஏ. ஒப்புதல்..!!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் விமான போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஏர் இந்தியா நிறுவனம் 480 விமானங்களையும், இண்டிகோ நிறுவனம் 500 விமானங்களையும் இறக்குமதி செய்ய டி.ஜி.சி.ஏ. கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இறக்குமதிக்கு தடையில்லா சான்று அளிக்கும் போது விமானங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் உறுதி செய்யப்படுவதாகவும், இதற்காக விமான நிறுவனங்கள் தங்கள் திட்டத்தை விமான நிலைய செயல்பாட்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் வி.கே.சிங் தனது பதிலில்…

மேலும் படிக்க

தலையில் தேங்காய் உடைக்கும் போராட்டம் : கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாயிகள்..!!

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து சட்டம் இயற்ற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நேற்றுடன் 26-வது நாளை எட்டியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்களது தலையில் தேங்காய்களை உடைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தினர். மேலும் என்எல்சி நிறுவனம் சமீபத்தில் விளைபயிர்களை அழித்து விவசாய…

மேலும் படிக்க

சினிமாவுக்காக விமானப்படை வேலையை விட்ட இயக்குநர்..!!

விமானப்படை வேலையை விட்டுவிட்டு சினிமா துறைக்கு வந்த இயக்குநர், சைக்காலஜி த்ரில்லர் படத்தை இயக்கிஉள்ளார். ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் படம் ‘ஒயிட் ரோஸ்’. ரஞ்சனி தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். ஜோஹன் ஷெவனேஷ் இசை அமைக்கிறார். இளையராஜா வி ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் சுசி கணேசனிடம் அசோசியேட்டாக பணியாற்றிய ராஜசேகர் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.ஆனந்தி இளம் மனைவியாக நடிக்கிறார். பல படங்களில் தனது சிறந்த நடிப்பால் நம்மைக் கவர்ந்துள்ள அவருடைய சினிமா…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram