திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.71¾ லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவம் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதைத்தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக துபாய் மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது…

மேலும் படிக்க

ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணைந்தார்..!!

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் 1973-ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜெயசுதா, அண்மையில் விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். தெலுங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி, பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் தருண் சங்க் ஆகியோர்…

மேலும் படிக்க

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம்..!!

உலக தாய்ப்பால் வாரவிழாவையொட்டி திருச்சி ஒய்.டபிள்யு.சி.ஏ. மகளிர் தங்கும் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) லட்சுமி, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணி, மாவட்ட திட்ட அலுவலர் நித்யா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கலந்து கொண்டு, தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி…

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி வழக்கு : சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது..!!

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்று கூறி, அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது…

மேலும் படிக்க

மருத்துவர்களின் கனிவான கவனிப்பு : ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வரும் கர்ப்பிணிகள்..!!

பெண்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் இந்த இடம்…. அரசு ஆரம்ப சுகாதார நிலையம்… இவர்கள் அனைவரும் கர்ப்பிணிகள்…. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கனிவான கவனிப்பால் இவர்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர். மருத்துவ சேவைகள் கட்டமைப்பில் நாட்டிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது தமிழ்நாடு. கிராமங்கள்தோறும் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களே இதற்கு சாட்சி. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சாதாரண காய்ச்சல், சளி முதல் மகப்பேறு மருத்துவம் வரை சிறப்பாக பார்க்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சேவை…

மேலும் படிக்க

நான் மன்னிப்பு கேட்டால் எனக்கு வாக்களித்து விடுவார்களா..?! -மீண்டும் விமர்சனம் வைத்த சீமான்..!!

இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.மணிப்பூர் மக்களும் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள், அதே போல் இங்குள்ள கிறிஸ்தவ மக்களும் வாக்களிக்க மாட்டார்கள், தேவனின் பிள்ளைகளாக இருந்த கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என சீமான் பேசினார்.இந்நிலையில் இன்று வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மன்னிப்பு கேட்டா ஓட்டு போடுவார்களா? அநீதிக்கு எதிராக உருவாக்கப்பட்ட மதங்கள் இஸ்லாமும், கிறிஸ்தவமும். ஆனால், இவர்கள்…

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானில் 3 கோடி மக்களுக்கு உதவி தேவை ~ சர்வதேச அமைப்பு யுனிசெஃப் தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் அரசியல் சூழல் காரணமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. வெள்ளம், பஞ்சம் காரணமாக ஆப்கன் மக்கள் நெருக்கடியில் உள்ளனர். 64 சதவீத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தற்போது 1.5 கோடி மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். 3 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லவும் பூங்கா, ஜிம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் அனுமதி இல்லை. அரசு வேலைகளிலிருந்து…

மேலும் படிக்க

மணிப்பூரை தொடர்ந்து 3-வது நாளாக வன்முறையால் பற்றி எரியும் ஹரியானா! 5 பேர் பலி..!! 70 பேர் கைது..!!

வன்முறையில் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். கலவரக்காரர்கள் பல ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். திங்கள்கிழமை தொடங்கிய வன்முறை 3-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நூஹில் ஏற்பட்ட சலசலப்பைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. நுஹ் வன்முறை தொடர்பாக பேசிய ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் வன்முறையில் 5 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் நூஹ் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்…

மேலும் படிக்க

மதுராந்தகம் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு சேற்றுக்கால் ஸ்ரீபிடாசி செவிலியம்மன் ஆலயம். இக்கோயில் அப்பகுதி மக்களின் கிராம தேவதையாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும் உற்சவ விழா வெகு சிறப்பு வாய்ந்ததாகும்.அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடு,கோழிகளை பலியிட்டும் வேண்டுதலை நிறைவேற்றினர்.திருவிழாவை முன்னிட்டு பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தேறியது. காலையில் அப்பகுதியை சேர்ந்த ஐந்நூற்றுக்கும் பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி ஊரணி…

மேலும் படிக்க

சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு கலெக்டர் தகவல்..!!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் 2021-22-ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 30 முக்கிய திட்டங்களை அறிவித்திருந்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது அத்தகைய முக்கிய அறிவிப்பாகும். தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது. இந்த விருதுகள் சுற்றுலா தொழில் முனைவோரையும், மாநிலத்தில்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram