அசோக் நகரில் ஆய்வின் போது சி.ஆர். சரஸ்வதியை நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

அமமுக கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே டி.டி.வி.தினகரனுடன் இணைந்து பயணித்து வருபவர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி. அமமுகவில் தற்போது கொள்கைப் பரப்பு செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பல்வேறு இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். சென்னை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கட்டளையிட்டுள்ளதால், வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. மேலும்,…

மேலும் படிக்க

மணிப்பூர் இனக் கலவரத்தில் உயிரிழந்தோர் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய பழங்குடி அமைப்பு திட்டம்..!!

மணிப்பூரில் இனக் கலவரத்தில் உயிரிழந்த 35 பேரின் உடல்களை ஒரே இடத்தில் இன்று (ஆக.3) நல்லடக்கம் செய்யவுள்ளதாக பழங்குடி இன அமைப்பான ஐடிஎல்எஃப் அறிவித்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3 ஆம் தேதி தொடங்கி மைத்தேயி – குகி இனத்தவர் இடையே நடைபெற்று வரும் மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஐடிஎல்எஃப் என்றழைக்கப்படும் பூர்வக்குடி தலைவர்கள் பலர் இணைந்த கூட்டமைப்பு கலவரத்தில் உயிரிழந்த 35 பேரின் சடலங்களை இன்று…

மேலும் படிக்க

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 3) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை 01.80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கு விற்பனையாகிறது. ஒரு…

மேலும் படிக்க

பிலிப்பைன்ஸ் விமான விபத்து : இந்திய மாணவர், பயிற்சியாளர் உயிரிழப்பு..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்திய மாணவர் ஒருவரும் அவரது பயிற்சியாளரும் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் உள்ள லாவோக் நகரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த விமானப் பயிற்சி மாணவரான அன்ஷும் ராஜ்குமார் மற்றும் அவருடைய பயிற்சியாளரும் பயணித்துள்ளனர். துகுகேராவ் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம், ககாயன் மாகாணத்தின் அல்காலா நகரிலிருந்து…

மேலும் படிக்க

உதவியாளர் காலணி எடுத்துக் கொடுத்த விவகாரம் : விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர்..!!

விழுப்புரத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனது உதவியாளரை காலணியை எடுத்துவரச் செய்தததாக செய்திகள் வெளியான நிலையில் அதுதொடர்பாக கோட்டாட்சியர் பிரவீணா குமாரி விளக்கம் அளித்துள்ளார். விழுப்புரம் அருகே ஸ்டாலின் நகரில் அரசு புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி வாழ்ந்து வந்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்காக ஆய்வு சென்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீணா குமாரி தன் உதவியாளரிடம் தன் காலணியை கொண்டுவருமாறு உத்தரவிட்டதாகவும், இதையடுத்து அவரின் உதவியாளர் கோட்டாட்சியரின் காலணியை கொண்டுவந்து ஜீப் பின்புறம் வைத்ததாகவும் செய்திகள் வெளியானது. இது…

மேலும் படிக்க

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு..!!

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

கரூரில் மீண்டும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!!

சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் உள்ள சங்கரின் வீடு மற்றும் அலுவலகம், கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனம், சின்ன ஆண்டங்கோவில் பகுதியில் உள்ள கிரானைட் கடை, அம்பாள் நகரில் உள்ள…

மேலும் படிக்க

ஐரோப்பாவில் பைக் பயணத்தை தொடங்கினார் நடிகர் ‘அஜித்’..!!

நடிகர் அஜித்குமார், பைக் பயணத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்.  அவர் உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தனது பைக் பயணத்தை தொடங்கினார்.  சண்டிகர், குலுமணாலி, கார்கில் ஸ்ரீநகர் ஜம்மு  கேதார்நாத் –  பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களில் அவர் பைக் பயணம் மேற்கொண்டார்.ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், அஜித் மீண்டும் ஐரோப்பாவில் தனது இருசக்கர வாகனப் பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால், விடாமுயற்சி என்ன…

மேலும் படிக்க

ஆந்திராவில் மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெண் ~ 8 வாகனங்கள் சேதம்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வி.ஐ.பி. சாலையில் நேற்று இரவு சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது மோதி, அருகில் இருந்த மரத்தின் மீது ஏறியபடி கார் நின்றது. அந்த காரை ஒரு பெண் ஓட்டியதாகவும், அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தில் 8 வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!!

ஆகஸ்டு 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது .தேர்வர்கள் http://www.tnpscexams.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். இவை தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் விவர பக்கம்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram