தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரன் ரூ. 44,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44,440-க்கும், ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து ரூ.5,555-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் ~ இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை..!!

ஒரே நாடு, ஒரே வாக்காளர் பட்டியலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசின் சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகிய தேர்தல்களுக்கு பொதுவான வாக்காளர் பட்டியலை அறிமுகப்படுத்த இந்திய சட்ட ஆணையம் தனது 255-வது அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும் இந்த பரிந்துரை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வில் இருப்பதாகவும் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். NEWS…

மேலும் படிக்க

மதுரையில் 116 உணவகங்களுக்கு நோட்டீஸ் ~ உணவுப் பாதுகாப்புத்துறை தகவல்..!!

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 20,000-க்கும் மேற்பட்ட உணவகங்கள்செயல்படுகின்றன. இதில் சில உணவகங்களில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்வது, கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்வது, கலப்படம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், உணவகம் மட்டுமின்றி பேக்கரி, டீக்கடைகள், பலகாரக் கடைகளிலும் கலப்படம், சுகாதாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மதுரை நகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இயங்கி வரும், உணவகங்களில்திடீர் சோதனையில் கடந்த ஜூன் மாதத்தில், 658 உணவகங்களில் ஆய்வு செய்தனர்.உணவு பாதுகாப்புத்துறையின்…

மேலும் படிக்க

சென்னை மெட்ரோவில் paytm மூலமும் டிக்கெட் எடுக்கும் முறை அறிமுகம்..!!

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் Paytm ‌செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே மும்பை, ஹைதராபாத் டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் Paytm செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி உள்ள நிலையில், தற்போது சென்னையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Paytm செயலில் transit பகுதியில் சென்னை மெட்ரோ ரீசார்ஜ் என்ற option உள்ளது. அதில் புறப்படும் இடம்…

மேலும் படிக்க

 தங்கம் விலையில் மாற்றமில்லை..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 4) எந்தவித மாற்றமுமின்றி நேற்றைய விலையான சவரன் ரூ.44,280-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை 0.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20-க்கு…

மேலும் படிக்க

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு உபசரிப்பு : ஒரே நாளில் சர்வதேச கவனம் பெற்ற மூதாட்டி..!!

தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டியவரின் பசியை போக்கிய அமெரிக்க மூதாட்டி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் உள்ள ப்ரூன்ஸ்விக் நகரத்தைச் சேர்ந்தவர் மார்ஜோரி பெர்கின்ஸ். 87 வயது மூதாட்டியான பெர்கின்ஸ் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜூலை 26 அன்று பெர்கின்ஸ் தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 2 மணியளவில் இளைஞர் ஒருவர் பெர்கின்ஸின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். சத்தம்…

மேலும் படிக்க

‘தேடவேண்டியது முடிவை இல்லை.. ஆரம்பத்தை’ – வைபவ்வின் ‘ரணம்’ டீசர்..!!

நடிகர் வைபவ் நடிக்கும் ‘ரணம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சரோஜா’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் வைபவ். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘பபூன்’ படம் வெளியானது. இதையடுத்து வைபவ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘ரணம்’. ஷெரிஃப் இயக்கும் இப்படத்தில் நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மது நாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு ஆரோல் கொரல்லி இசையமைக்கிறார். வைபவ்வின் 25-வது…

மேலும் படிக்க

தொல்லியல்துறை ஆய்வுக்கு தடை கோரிய ஞானவாபி கமிட்டியின் மனு தள்ளுபடி..!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அந்தப் பகுதியில் தொல்லியல்துறை ஆய்வு நடத்த அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 24-ந்தேதி தொல்லியல்துறை ஆய்வை தொடங்கியது. இதை எதிர்த்து ஞானவாபி கமிட்டி சார்பில் சுப்ரீம்…

மேலும் படிக்க

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பின்னர் சூரத் மாவட்ட கோர்ட்டும் உறுதி செய்தது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டரீதியாக சரிதான் எனக்கூறிய நீதிபதி,…

மேலும் படிக்க

சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமா..?? குறுகிய கால விசா நிறுத்தப்படுவதாக அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்து நாடு ஒரு சிறிய நாடாக இருந்தாலும் அது சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.  வானை தொடும் ஆல்ப்ஸ் மற்றும்  பனிப்பாறைகள்,  அத்துடன்அழகிய நிலப்பரப்பு, பழைய அரண்மனைகள், தூய டர்க்கைஸ் ஏரிகள் மற்றும் ஒவ்வொரு திசையிலும் உள்ள கம்பீரமான மலைச் சிகரங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். ஐரோப்பாவின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியான ரைன் நீர்வீழ்ச்சி  சுவிட்சர்லாந்திற்கு வருபவர்களை ஈர்க்கும் இயற்கை அழகு என்றே கூறலாம். சர்வதேச சுற்றுலாத்தலமான சுவிட்சர்லாந்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். டெல்லியில் உள்ள…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram