கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி : சென்னை மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்..!!

கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.4-வது சர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 4 முதல் 11 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டி 4 பிரிவுகளில் (5 கி.மீ, 10 கி.மீ, 21.1 கி.மீ, 42.2 கி.மீ) நடைபெறுகிறது. அனைத்து பிரிவுகளும் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் தொடங்கி, தீவுத்திடல் மைதானத்தில் முடிவடையும். இதையடுத்து…

மேலும் படிக்க

ஜம்மு-காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு..!!

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 8.36 மணிக்கு 129 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அட்சரேகை 73.32 ஆகவும், தீர்க்கரேகை 184 ஆகவும் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 4.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

காவிரி நீர் விவகாரத்தில் இல்லாத ஊருக்கு வழி தேடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் : இபிஎஸ் கண்டனம்..!!

காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லாத ஊருக்கு வழி தேடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்று, நம் நானிலத்தின் பெருமையை உயர்த்திப் பாடினார் எம்ஜிஆர். ஆனால், ஆளும்போதெல்லாம் மக்களை எல்லா விதத்திலும் கையேந்த வைப்பதையே தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வரும் திமுக-வும், அதன் அரசும், நம் அண்டை மாநிலமான கர்நாடகத்திடம் காவிரி…

மேலும் படிக்க

‘சிந்தாதிரிப்பேட்டை’ மீன் சந்தையில் மீன் வாசத்தையும் தாண்டி ‘குப்’ பென்று வீசும் துர்நாற்றம்..!!

சென்னையில் காசிமேடு மீன் சந்தைக்கு அடுத்து, மிகப்பெரிதாக விளங்குவது சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை. இது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் மிக பழமையான மீன் சந்தை ஆகும். இங்கு மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் ஒரே இடத்தில் நடைபெறுகிறது. அதிகாலை 4 மணி முதலே இச்சந்தை சுறுசுறுப்பாக இயங்க தொடங்கிவிடும். உள்ளூர் மீன்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த சிறு மீன்கள்முதல் ராட்சத மீன்கள் வரை இங்கு விற்பனையாகின்றன. அசைவ உணவு பிரியர்கள்…

மேலும் படிக்க

மணிப்பூரில் மீண்டும் புதிதாக வெடித்த கலவரம் : 3 பேர் சுட்டுக்கொலை..!!

மணிப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. க்வாக்டா பகுதியில் தான் இந்தக் கலவரம் நடந்துள்ளது. கலவரத்தால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது. இது குறித்து பிஷ்ணுபூர் காவல்துறை தரப்பில், “மத்தியப்…

மேலும் படிக்க

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..!!

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள நிலையில், வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஒடி 75 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக…

மேலும் படிக்க

டெம்போ வாகனத்தில் வந்து ‘பசு’மாட்டை திருடி செல்லும் கும்பல்..!!

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில், இரவு நேரங்களில் பசுமாடுகள் திருடுவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ஆற்காடு சாலை சி.எம்.சி மருத்துவமனை அருகே சாலை ஓரம் நின்று கொண்டு இருந்த பசுமாட்டை 3-பேர் கொண்ட வெளிமாநில கும்பல் டெம்போ வாகனத்தில் திருடிச் செல்கிறனர்.இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் மக்களின்கோரிக்கையாக உள்ளது. இந்த வீடியோ அருகே உள்ள கடையின் வெளியே…

மேலும் படிக்க

நெதர்லாந்தில் சரக்கு கப்பலில் தீ விபத்து : காயமடைந்த 20 இந்திய மாலுமிகள் தாயகம் திரும்பினர்..!!

ஜெர்மனியில் இருந்து ‘பிரீமென்ட்டில் ஹைவே’ என்ற சரக்கு கப்பல் 3,800-க்கும் அதிகமான கார்களுடன் இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் முழுவதும் இந்திய மாலுமிகளால் இயக்கப்பட்டது. அந்த கப்பலில் 21 இந்திய மாலுமிகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி நெதர்லாந்து நாட்டில் உள்ள அமிலாந்து தீவுக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது ‘பிரீமென்ட்டில் ஹைவே’ சரக்கு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. இதில் மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.அதேபோல் தீ விபத்தில் உயிரிழந்த இந்திய மாலுமியின் உடலை…

மேலும் படிக்க

ஹாரி பாட்டர் வெளியீட்டாளர் படகு விபத்தில் உயிரிழப்பு…!!

ஹாரி பாட்டர் புத்தக தொடரின் முன்னணி வெளியீட்டாளர் அட்ரியன் வாகன் (வயது 45). இவர் தனது கணவர் மைக் மற்றும் குழந்தைகள், லியானா (14) மற்றும் மேசன் (11) ஆகியோருடன் விடுமுறையை கொண்டாட இத்தாலி சென்றார். இத்தாலியில் நேபிள்ஸுக்கு அருகிலுள்ள சலேர்னோ மாகாணத்தில் உள்ள அமல்பி கடற்கரையில் அவர்கள் ஒரு சிறிய படகில் பயணம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்களின் கப்பல் 85 பேருடன் சென்ற சுற்றுலா கப்பல் ஒன்றின் மீது மோதியது. இதில் அட்ரியன்…

மேலும் படிக்க

இல்லத்தரசிகளுக்கு மேலும் ஓர் இடி : தக்காளியை தொடர்ந்து வெங்காய விலையும் அதிகரிக்கும் என தகவல்..!!

நாடு முழுவதும் தக்காளி விலை சராசரியாக கிலோ ரூ.120-ஐ கடந்தே பல நாட்களாக விற்பனையாகிவரும் நிலையில் வரும் செப்டம்பரில் இருந்து வெங்காய விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அக்டோபரில் காரிப் பயிர்கள் அறுவடையாகி வரும்வரை இந்த விலையேற்றம் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தக்காளி விலை தற்போது தான் ரூ.200 ல் இருந்து மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், வெங்காய விலையும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அந்த…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram