சந்தனவர்த்தினி ஆற்றில் மணல் அள்ளிய வாலிபர் கைது..!!
சாணார்பட்டி அருகே ராஜக்காபட்டி கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ராஜக்காபட்டியில் உள்ள சந்தனவர்த்தினி ஆற்றில் பண்ணைப்பட்டியை சேர்ந்த ஜெயசூர்யா மணிகண்டன் (வயது 22) என்பவர் மணல் அள்ளியது தெரியவந்தது. இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் வசந்தகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீராஜூதீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயசூர்யா மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவர் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. NEWS EDITOR :…