வங்காளதேசத்தில் ‘டெங்கு’ காய்ச்சலுக்கு 300 பேர் பலி..!!

ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்காளதேசத்தில் பருவமழைக் காலமாக கருதப்படுகிறது. பருவமழைக் காலத்தில் கொசுக்களால் அதிக அளவு நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நாடாகவும் வங்காளதேசம் விளங்குகிறது. கடந்த ஜூன் மாதம் அதிக அளவு மழைப்பொழிவு ஏற்பட்டதால் வங்காளதேசம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.மருத்துவமனைகளில் பலர் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுகிறது. நடப்பாண்டில் ஜனவரி முதல் இதுவரை அந்த நாட்டில்…

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் ~ வானிலை ஆய்வு மையம்..!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (07.08.2023) முதல் (13.08.2023) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். (07.08.2023 மற்றும் 08.08.2023) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக…

மேலும் படிக்க

‘நெதர்லாந்தில்’ சரக்கு கப்பலில் தீ – 20 ‘இந்திய’ பணியாளர் மீட்பு..!! ஒருவர் உயிரிழப்பு..!!

கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் நெதர்லாந்து கடற்பகுதியில் தீப்பிடித்ததையடுத்து அதிலிருந்த 20 இந்திய பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது: பனாமாவுக்கு சொந்தமான’பெர்மான்டில் ஹைவே’ என்றசரக்கு கப்பல் ஜெர்மனியில் இருந்து 3,800 கார்களை ஏற்றிக்கொண்டு எகிப்து நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில், 498 மின்சார வாகனங்களும் அடக்கம். ஜூலை 25-ம் தேதியன்று நெதர்லாந்து கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த கப்பலின் மேல் தளத்தில் திடீரென தீப்பிடித்தது….

மேலும் படிக்க

ராஜஸ்தான் இளைஞரை ஆன்லைனில் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் பெண்..!!

இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரை, பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த பெண் ஆன்லைன் வாயிலாக திருமணம் செய்தார். இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் அர்பாஸ். அவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த அமீனாவுக்கும் சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் திருமண விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மணமகன்…

மேலும் படிக்க

பாகிஸ்தான் ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு..!!

பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயில், ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் உள்ள நவாப்ஷா பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. நவாப்ஷாவுக்கும் ஷாஹ்தாபூருக்கும் இடையே சஹாரா ரயில் நிலையத்திலிருந்து புறப்புட்டுச் சென்றபிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதே போல கடந்த 2021ஆம் ஆண்டு இதே சிந்து…

மேலும் படிக்க

ஆப்கனிஸ்தான் : 3-ம் வகுப்புக்கு மேல் பெண் பிள்ளைகள் கல்வி கற்க தலிபான் தடை..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் மூன்றாம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் குறிப்பிட்ட சில மாகாணங்களில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளி செல்ல தலிபான் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது…

மேலும் படிக்க

உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்..!!

உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. மருத்துவர்களின் அலட்சியத்தால், மேற்சிகிச்சையின் போது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக குழந்தையின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இப்போது அந்த குழந்தை சிகிச்சை…

மேலும் படிக்க

கருணாநிதி நினைவு நாள் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி..!!

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் அமைதிப் பேரணி மேற்கொண்டனர். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து பேரணியை தொடங்கினார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மஸ்தான், தங்கம் தென்னரசு, சேகர் பாபு…

மேலும் படிக்க

வண்ணாரப்பேட்டையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டலை சூறையாடிய கும்பல்..!!

சென்னை வண்ணாரப்பேட்டை ராமானுஜ ஐயர் தெருவில் துரித உணவகம் நடத்தி வருபவர் ராஜேந்திரன். இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு மாஸ்டர் வேல்முருகன் (வயது 32) மற்றும் ஊழியர் கார்த்திக் (26) ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். ஊழியர் கார்த்திக், சாப்பிடதற்கு பணம் தரும்படி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் கார்த்திக்கிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். பின்னர்…

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..!!

சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதம் எனக் கூறி சுப்ரீம் கோர்ட்டில் அவரது மனைவி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது சட்டவிரோதம் இல்லை. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடையில்லை என்றும், கைது செய்த பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram