ஆன்லைன் வர்த்தக நிறுவன மேலாளர் சுட்டுக்கொலை..!!
தலைநகர் டெல்லியின் பஜன்புரா பகுதியை சேர்ந்தவர் ஹர்பிரீத் கில் (வயது 36). இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் சீனியர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், ஹர்பிரீத் கில் நேற்று இரவு 11 மணியளவின் தனது உறவினருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். சுபாஷ் விஹார் பகுதியில் சென்றபோது அவர்களை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது.இந்த துப்பாக்கிச்சூட்டில் பைக்கில் சென்றுகொண்டிருந்த ஹர்பிரீத் கில் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….