ஜூலை மாதம் சைவ உணவின் விலை 28% அதிகரிப்பு..!!

கடந்த ஜூலை மாதத்தில் சைவ உணவின் (Veg Thali) விலை சுமார் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் (Crisil Market Intelligence and Analytics) தெரிவித்துள்ளது. இதே கால கட்டத்தில் அசைவ உணவின் விலை சுமார் 11 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாதத்துடனான ஒப்பீடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளின் விலை உயர்வு இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளியின் விலை மும்மடங்கு அதிகரித்ததும், மிளகாய் (விலையில்…

மேலும் படிக்க

14 வயது மாணவரை 25 முறை..!! 74 வயது ஆசிரியைக்கு 600 ஆண்டுகள் சிறை..!!

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள தோமாஹாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2016 ஆம் ஆண்டில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அன்னே என் நெல்சன் கோச். அப்போது 14 வயது மாணவனை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 600 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது. அக்டோபர் 27 அன்று தண்டனை விதிக்கப்படும் வரை நெல்சன் கோச் சிறையில் இருக்குமாறு ஸ்கைல்ஸ் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் மன்ரோ கவுண்டி சர்க்யூட்…

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை..!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த 25-ம் தேதி 400 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களை கைது செய்தனர். மேலும் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், மீனவர்களின் வழக்கு இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் 9…

மேலும் படிக்க

எதிர்க்கட்சிகள் அமளி : மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு..!!

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், மக்களவையில் அவை நடவடிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான சீருடை, காலணிகள் உள்ளிட்டவை உடனடியாக வழங்க வேண்டும் ~ அண்ணாமலை..!!

பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கடந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய புத்தகப் பை மற்றும் காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மாணவர்களுக்கான சீருடை ஒன்று மட்டுமே வழங்கியிருப்பதால், தினமும் சீருடை அணிய முடியாமல் மாணவர்கள் பள்ளிக்கு வரும் நிலையில் இருப்பதாகவும் இன்றைய நாளிதழில் செய்திகள் வந்துள்ளன. மேலும், ஒரு சில பள்ளிகளில் வழங்கப்பட்ட காலணிகள், மாணவர்களுக்குப் பொருந்தும் அளவிலும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின்…

மேலும் படிக்க

30 நாட்களில் வெளியாகும் “ஜவான்”..!! இணையத்தில் வைரலாகும் 30 வினாடி வீடியோ..!!

தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரைத்துறையில் இயக்குநர் அட்லி அறிமுகமாகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத்…

மேலும் படிக்க

விசைத்தறி ~ கைத்தறி விவகாரம் : கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு..!!

கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் நெசவு செய்வதால் கைத்தறி நெசவாளர்கள் வேலையிழந்து நெசவுத் தொழிலை விட்டு வெளியேறி வருகிறார்கள். தமிழகத்தின் பாரம்பரியமான தொழில்களில், கைத்தறியால் நெய்யப்படும் நெகமம் கைத்தறி சேலையும் ஒன்று. புவிசார் குறியீடு பெற்று, தனித் தன்மையுடனும், தரத்தின் மூலமும் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது கைத் தறி சேலை. அதேசமயம், கைத் தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகமான பேட்டு பார்டருடன் கூடிய சேலையை, முறைகேடாக விசைத் தறியால் உற்பத்தி செய்து, விற்பனை செய்வதால் தனித்…

மேலும் படிக்க

 தங்கம் விலையில் மாற்றமில்லை; சவரன் ரூ..44,440 – க்கு விற்பனை..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 7) எந்த மாற்றமுமின்றி சவரன் ரூ.44,440-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள்கிழமை) எந்தவித மாற்றமுமின்றி…

மேலும் படிக்க

தமிழக இளைஞர்களை உலகளவில் முதன்மையானவர்களாக மாற்றுவதே எனது லட்சியம் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, நான் முதல்வன் திட்டம் எனது கனவு திட்டம். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வளர்ந்த பின்னர் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் வளர்ந்து வருகிறது. அனைத்து தரப்பினரும் வளர்ந்து வருகிறார்கள். மாணவர்கள், இளைஞர்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இந்த திட்டம் காரணமாக உள்ளது. நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கருணாநிதி. நான் முதல்வன் திட்டம் இளைஞர்களிடம் மாற்றத்தை…

மேலும் படிக்க

செல்பி எடுப்பதாக லிவ் இன் காதலி, மகள்களை ஆற்றில் தள்ளிய காதலன் ~ குழாயில் தொங்கியவாறு உயிர்பிழைத்த சிறுமி..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரவுலபாலம் போலீசாருக்கு அவசர உதவி எண் ‘100’ மூலம் நேற்று அதிகாலை 3.50 மணியளவில் போன் வந்தது. அதில் பேசிய சிறுமி தான் கோதாவரி ஆற்றின் ரவுலபாலம் கவுதமி மேம்பாலத்தில் உள்ள குழாயை பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதாகவும் தனக்கு உதவுமாறும் போலீசாரிடம் கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றனர். அங்கு கோதாவரி ஆற்றின் மேம்பால குழாயில் ஒரு சிறுமி தொங்கிக்கொண்டு உதவிக்காக குரல் கொடுத்து கொண்டு இருந்ததை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram