‘நாங்குநேரி’ அருகே குளத்தில் கொட்டப்படும் ‘கேரளா’ குப்பைகளால் சுகாதாரசீர்கேடு..!!
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த நம்பி நகரில் சுட்டிப்பாறை குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக கேரளாவிலிருந்து லாரிகள் மூலம் குப்பைகளை மூட்டை மூட்டையாக ஏறி ஆள்நடமாட்டம் இல்லாத போது இரவு நேரத்தில் கொட்டிவிட்டு செல்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். பின்னர் குப்பைகளுக்கு தீ வைத்து செல்வதால் நச்சுப்புகை பரவி வருவதால் இதன் சுற்றுவட்டார பகுதியில் சுவாசக் காற்றில் நச்சு கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது…