Month: August 2023

சென்னையில் சிறுமியை மாடு முட்டிய சம்பவம்..!!

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் நேற்று (புதன்கிழமை) மாலை பள்ளி முடிந்து தாயுடன் சென்ற சிறுமியை மாடு முட்டி சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அது தொடர்பாக…

தலைமை ஆசிரியர்கள் முயற்சியால் அடியோடு மாறிப்போன அரசு பள்ளிகள்..!!

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியை பார்ப்பவர்கள் அதை அரசுப் பள்ளி என்றே கூறமாட்டார்கள். காரணம் தனியார் பள்ளிக்கு நிகராக பள்ளிக் கட்டிடங்கள் ஜொலிக்கின்றன. சுத்தமான கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விசாலமான விளையாட்டு திடல், ‘ஸ்மார்ட்’ வகுப்பறை,…

பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்..!!வயதான தம்பதி கழுத்தை நெரித்து கொலை..!!

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், ஈ.வி.பி.டவுன் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 83), இவரது மனைவி ஜெய்பார்வதி (72), இவர்களது மகன் சக்திவேல் (46). 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் தனது பெற்றோர் வீட்டில் இருந்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு…

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது..!!

ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பயணம் ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று…

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு…

மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது..!!

மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லாதது குறித்து எதிக்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், மணிப்பூர் செல்ல பிரதமர் மோடிக்கு கடந்த 100 நாட்களாக நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது…

தளபதி 68-க்கு வாழ்த்துத் தெரிவித்த அஜித்..!!

விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும்…

‘ஜென்டில்மேன் 2’ ~ மோஷன் போஸ்டர் வெளியிட்ட படக்குழு..!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு, அர்ஜுன் – மதுபாலா நடிப்பில் வெளியாகி சூப்பர் – டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. இப்படம் வெளியாகி சுமார் 30 வருடங்கள் கழித்து தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் ‘ஜென்டில்மேன் ‘ படத்தின் இரண்டாம்…

ஓணம் பண்டிகை : ஆக.29-ல் சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை..!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29.08.2023, செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி…

காதல், திருமணம், சிக்கல்..!! விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் ‘குஷி’ ட்ரெய்லர்..!!

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘குஷி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம் ‘குஷி’. சச்சின் கெடகர், சரண்யா, முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, வெண்ணெலா கிஷோர்,…

WhatsApp
YouTube
Instagram
Telegram