“நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது” ~ பெற்றோர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்..!!
ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் கலந்து கொண்ட பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு ஆளுநர் ரவியிடம் முன்வைத்தனர். நிகழ்ச்சியின்போது சேலத்தை சேர்ந்த பெற்றோர் ஒருவர் ஆளுநரிடம் நீட் தேர்வை நீங்கள் எப்போது முழுவதுமாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததாவது.. “ நீட் தேர்விற்கு…