செப்டம்பர் 12ல் ‘ஆப்பிள்’ ஈவென்ட்..!!

ஆப்பிள் தனது வரவிருக்கும் ஐபோன் சீரிஸை செப்டம்பர் 12 அல்லது 13 ஆம் தேதி வெளியிடலாம் என்று சில நாட்களாக வரும் செய்திகளில் தகவல்கள் கிடைத்தன. அதே நேரத்தில், இந்த ஈவென்ட் குறித்து ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை, ஆனால் இப்போது ஐபோன் தயாரிப்பாளர் இந்த ஈவென்ட் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஆப்பிள் ஈவென்ட் செப்டம்பர் 12 அன்று நடைபெற உள்ளது. ஆப்பிளின் மெகா ஈவென்டை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ…

மேலும் படிக்க

திருப்பூர் : சமய நல்லுறவு இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்..!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் பல சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக மூன்று நாட்கள் பொதுமக்களுக்கான இலவச ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த முகாமை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ்,பல சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் முகமது ரஃபீக் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் குழந்தைகள் பெரியவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் சங்க மாவட்ட தலைவர் ஷாஷகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

மேலும் படிக்க

வீடுகளின் மேலே உள்ள கூரைகளின் வழியாக ராட்சத மலைப்பாம்பு மரத்திற்கு ஊர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!!

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 16 அடி நீள மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டமை அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனை காண அப்பகுதி மக்கள் அனைவரும் திரண்டனர்.அந்தப் பாம்பு வீட்டின் கூரைக்கு மேல் ஊர்ந்து சென்றுள்ளது, ஆனால் அவ்வளவு பாரிய மலைப்பாம்பு அங்கு எப்படி வந்தது என்று அப்பகுதி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

“எனக்கு உதவ யாரும் இல்லை” என ‘பிரிட்டன்’ இளவரசர் ‘ஹாரி’ தெரிவித்துள்ளார்..!!

பிரிட்டன் அரச குடும்பத்தில் மன்னர் சார்ல்ஸ்- டயனாவின் இளைய மகன் ஹாரி. பிரிட்டன் அரச குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்த வந்த இவர், 2007-2008 ஆண்டுகளில் பிரிட்டிஷ் ராணுவத்தில் விமானக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றினார்.. மேலும், 2012-2013க்கு இடையே தாக்குதல் ஹெலிகாப்டர் குழுவிலும் அவர் இடம் பெற்றிருந்தார். அப்போது சில வாரங்கள் அவர் ஆப்கானிஸ்தானிலும் பணியமர்த்தப்பட்டு இருந்தார். அப்போது நடந்த அனுபவங்கள் குறித்து அவர் தனது ஸ்பேர் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். இளவரசர் ஹாரி, தனது ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய…

மேலும் படிக்க

QR Code மெகந்தி மூலம் சகோதர்களிடம் வசூலித்த சகோதரி..!!

சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்‌ஷாபந்தன். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் ( அதாவது ஆகஸ்ட் மாதத்தில் ) வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. ராக்கி என்றும் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது.ரக்‌ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பந்தம் என்பது பொருள். இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனித கயிறு கட்டுவர். தீயவற்றில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட…

மேலும் படிக்க

திருவண்ணாமலை : வீடுகளை இடிக்க முயற்சி செய்வதை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக நடத்திய போராட்டத்தில் கண்களில் கருப்பு துணியை கட்டி கோஷம் எழுப்பினர்..!!

திருவண்ணாமலை அருகில் உள்ள சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்று குடியிருப்புகளை இடிக்க முயற்சி செய்வதை நிறுத்தக்கோரி அகில இந்திய விவசாயிகள் மகாசபை, அகில இந்திய முற்ேபாக்கு பெண்கள் கழகம் சார்பில் நேற்று முன்தினம் தொடர் முழுக்க போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட செயலாளர் மாலினி, அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து…

மேலும் படிக்க

தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை 144 தடை..!!

பூலித்தேவரின் 308வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 1ல் கொண்டாடப்படுகிறது. சிவகிரி அருகே நெற்கட்டும்செவல் பகுதியில் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவரின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் வருகை தருவதால் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

“ஜவான்” திரைப்பட ஆடியோ ரிலீஸ், சென்னையில் நடைபெற, நடிகர்  ‘ஷாருக்கான்’ வைஷ்ணவ தேவி கோயிலில் நேற்று சாமி தரிசனம்..!!

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.  நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி,  யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது  அனிருத் இசையமைத்துள்ளார். ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் பலத்த பாதுகாப்புடன் ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சென்றார். அவர் முகத்தை…

மேலும் படிக்க

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது..!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டிரல், சேத்துப்பட்டு, மாதவரம், வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், கேகே நகர், கிண்டி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல், பொன்னேரி,…

மேலும் படிக்க

விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகளை இறக்குமதி ~ இலங்கை..!!

நமது அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி நெருக்கடி காரணமாக கால்நடை தீவன இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியால் அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் முட்டைகளுக்கு தட்டுப்பாடு உருவானது. அப்போது முதல், இலங்கை அரசு இந்தியாவில் இருந்து முட்டைகளை நம்பியுள்ளது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து 20 லட்சம் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்தது.தலைநகர் கொழும்பில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி சபை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram