தூத்துக்குடியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மீனவர்கள் நாட்டு படகுகள் மற்றும் சிறிய வகையான படகுகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் தொழில்களை செய்து வருகின்றனர். மேலும் கடல் உள்வாங்கியது தொடர்பாக கடல்சார் நிபுணர்களிடம் கேட்டபோது, ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் கடல்கள் சீற்றத்துடனும்,கடல் உள்வாங்கி காணப்படுவதும் இயல்பான ஒன்று தான் எனவே இதனை…

மேலும் படிக்க

பராமரிப்பு பணிகளுக்காக கொடைக்கானலின் சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடல்..!!

திண்டுக்கல்லின் சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. குறிப்பாக கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன்மரக்காடு, பில்லர்ராக் உள்ளிட்டவை சிறந்த சுற்றுலா இடங்களாக விளங்குகின்றன. இந்த நிலையில், வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். அதன்காரணமாக விடுமுறை நாட்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல் சுற்றுலா இடங்களில்…

மேலும் படிக்க

மராட்டியத்தில் மிதமான நிலநடுக்கம்..!!

மராட்டியத்தின் கோலாப்பூர் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை . NEWS EDITOR : RP

மேலும் படிக்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண குளிர்பானம்..!!

1947 ஆம் ஆண்டு காலனித்துவ ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து நமது நாடு சுதந்திரம் பெற்ற தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் விழாக்கள் களைகட்டும். இந்திய தேசிய கொடியின் நிறத்தை குறிக்கும் வகையில் மூவர்ண உணவு மற்றும் ஜூஸ் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தண்டாய் ஜூஸ் எப்படி செய்வது என்பது குறித்த அந்த வீடியோவில் பாதம், பிஸ்தா,…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம்…

மேலும் படிக்க

பறந்து கொண்டிருந்தபோது 3 நிமிடங்களில் 15,000 அடி கீழ் இறங்கிய அமெரிக்க விமானம்..!!

அமெரிக்க நாட்டில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று 3 நிமிடங்களில் சுமார் 15,000 அடி கீழ் இறங்கியுள்ளது. அதனால், அதில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அமெரிக்க நாட்டின் விமான நிறுவனம் இயக்கி வரும் விமானம் ஒன்று வட கரோலினாவின் சார்லோட் பகுதியில் இருந்து புளோரிடாவின் கெய்னெஸ்வில்லிக்கு கடந்த 10-ம் தேதி பயணித்துள்ளது. அப்போது அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென வெறும் மூன்றே நிமிடங்களில் சுமார் 15,000 அடி கீழ் இறங்கியுள்ளது….

மேலும் படிக்க

சுதந்திர தின விழா நிகழ்ச்சி மேடையில் மயங்கி விழுந்த சுகாதாரத்துறை மந்திரி..!!

நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி பிரபுராம் சவுத்ரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியின்போது தேசியக்கொடியை ஏற்றிய பின் பிரபுராம் சவுத்ரி சிறப்பு உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மந்திரி பிரபுராம் சவுத்ரி நிலைதடுமாறி…

மேலும் படிக்க

தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாளையொட்டி பேரணி செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கைது..!!

தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் நேற்று தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாளையொட்டி அமைதிப் பேரணி நடத்தினர். அதன்படி காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாள் அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்ட நிலையில் இதற்கு போலீசார் அனுமதி கொடுக்க மறுத்தனர். இந்நிலையில் போலீசாரின் அனுமதியின்றி, காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் அருகாமையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தங்களது கைகளில் தேசிய கொடியை ஏந்தியவாறு அமைதிப் பேரணி…

மேலும் படிக்க

கோதண்டராமர் கோவிலில் சமபந்தி விருந்து..!!

ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள கோதண்ட ராமர் கோவில், வீரஆஞ்சநேயர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். இக்கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து இன்று நடந்தது. ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார். இதில் உடல் உழைப்பு மேம்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.எஸ்.அன்பழகன், நகரசபை உறுப்பினர் உஷாராணி மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம்.பழனி, அறங்காவலர்கள் பரமேஸ்வரன், நவநீதம், சேகர் உள்பட பொதுமக்கள் 1000-க்கும்…

மேலும் படிக்க

பூந்தமல்லியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி..!!

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்தது. இதனால் பூந்தமல்லியில் மட்டும் 103 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் பூந்தமல்லி நகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட முல்லா தோட்டம் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மழைநீரோடு அதிக அளவு கழிவுநீர் கலந்து இருப்பதால் அங்கு பெரும் துர்நாற்றம் வீசி வருவதுடன், அங்குள்ள வீடுகளுக்குள்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram