கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் : 3 நாள் சிறப்பு முகாம்..!!

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24-ந் தேதியன்று தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. முதற்கட்டமாக 20 ஆயிரத்து 765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள்…

மேலும் படிக்க

கிராமப்புற மாணவர்களுக்கு கடுமையான ஒன்றாக நீட் தேர்வு மாறியுள்ளது ~ அமைச்சர் ரகுபதி..!!

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கோயிலில், 77-வது சுதந்திர தின விழா சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் விழாவினை தொடங்கி வைத்து பொது மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பிறகு சமபந்தி விருந்தில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி, நீட்…

மேலும் படிக்க

பிரதமராக வரவில்லை, இந்துவாக வந்துள்ளேன் ~ பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேச்சு..!!

பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ராம கதை தொடர்பாக ஆன்மீக போதகர் மொராரி பாபு உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய சுதந்திர தினமான நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய அந்த உரையில், இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது….

மேலும் படிக்க

உ.பியில் மகளைத் தோளில் சுமந்து சென்ற நபர்..!! தலையில் சுடப்பட்ட கொடூரம்..!!

இந்த சிசிடிவி காட்சியில் பாதிக்கப்பட்ட 30 வயதான ஷோயப் என்ற நபர் தனது மகளுடன் பாபுசாய் பகுதியில் ஒரு குறுகிய சாலையில், நடந்து செல்வதைக் காட்டுகிறது. அப்போது எதிர் முனையிலிருந்து ஆயுதம் ஏந்திய ஒருவர் வந்து துப்பாக்கியை வெளியே எடுத்து, ஷோயப் என்ற அந்த நபரை அருகில் இருந்து துப்பாக்கியால் தலையில் சுட்டுவிட்டு, அங்கு காத்திருந்த இருவருடன் பைக்கில் ஏறி தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர் உடனடியாக சாலையில் சரிய, ஷோயப் தோளில் இருந்த அவரது மகளும்…

மேலும் படிக்க

‘சமந்தா’ பல தடைகளை எதிர்கொண்டு போராடி வருகிறார் – விஜய தேவரகொண்டா..!!

நடிகை சமந்தா பல தடைகளை எதிர்கொண்டு போராடி வருகிறார். அவர் முகத்தில் சிரிப்பை பார்க்க ஆசைப்படுகிறேன்” என அவரது உடல்நிலை குறித்து விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார். விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள ‘குஷி’ படம் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் புரமோஷனின் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் மியூசிகல் கான்சர்ட் நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் கலந்துகொண்டு நடனமாடினர். இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “சமந்தாவின் சிரிப்பை பார்க்க…

மேலும் படிக்க

நடிகை சித்ரா வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்..!! சென்னை ஐகோர்ட்டில் தந்தை மனு..!!

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சித்ராவின் மரணம் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் சிறப்பு கோர்ட்டில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சித்ராவின் தந்தை காமராஜ், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்த வழக்கின்…

மேலும் படிக்க

திருட்டு போன 20 செல்போன்கள் மீட்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன 20 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீ்ஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனதாகவும், திருட்டு போனதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் செய்திருந்தனர். அந்த புகார்கள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன செல்போன்களை தேடி வந்தனர். அதன்படி ரூ.4 லட்சம் மதிப்பிலான 20 செல்போன்களை போலீசார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்…

மேலும் படிக்க

சாலையோர காஃபி கடையில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்..!!

சமூக வலைதளத்தில் பிரசாந்த் நாயர் என்பவர் காபி கடை முன் வைக்கப்பட்டுளள ஒரு போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எனது காஃபி ஷாப்பை உலக சந்தைக்கு கொண்டு செல்வதே என கனவு என எழுதப்பட்டுள்ளது. மும்பை கண்டிவல்லியை அடுத்த தாக்கூர் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது சாலை ஓரத்தில் ஒரு சிறிய காஃபி கடை தென்பட்டது. அங்கு காஃபி, பிஸ்கெட், சினாக்ஸ் விற்பனை செய்தவற்காக வைக்கப்பட்டிருந்து. அந்த கடையின் முன் போஸ்டர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. உற்றுப்பார்த்தேன்….

மேலும் படிக்க

சுதந்திர தின தள்ளுபடி விற்பனையை தொடங்கியது வசந்த் & கோ நிறுவனம்..!!

நாடு முழுவதும் உள்ள வசந்த் & கோ கிளைகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து முன்னணி வீட்டுஉபயோகப் பொருட்களும் மிகக்குறைந்த விலை மற்றும் தவணை முறை வசதியில் கிடைக்கும். வசந்த் & கோ நிறுவனம் மிகக் குறைந்த உத்தரவாதம், ஏராளமான பரிசுகள், மிகச் சிறந்த விற்பனை திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இந்நிறுவனம் விரைவில் தனது 113-வது கிளையைத் தொடங்கவுள்ளது. வசந்த் & கோ சுதந்திர தின…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு..!!

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 16) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,960-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை கிராமுக்கு 0.20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20-க்கு விற்பனையாகிறது….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram