ISRO நடத்திய தேர்வில் ஆள்மாறாட்டம்

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாற்ற, தொழில் நுட்ப பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் 10 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நடத்தியது. இதில், தேர்வு மையங்களில் தேர்வு எழுத வேண்டியவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் கலந்து கொண்ட விவரம் தெரிய வந்து உள்ளது. அவர்கள், மொபைல் போன் வழியே புகைப்படங்களை எடுத்து, கேள்விகளை வேறொருவருக்கு அனுப்பி, புளூடூத் வழியே பதில்களை பெற்று வந்துள்ளனர். இதுபற்றி அரியானாவில்…

மேலும் படிக்க

யூகங்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது..!!

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தி வரக்கூடிய நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், திறமையை நம்பி பந்தயம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை சூதாட்டமாக கருத முடியாது. அதனால் பந்தயம் வைத்து விளையாடும் திறமைக்கான விளையாட்டு சூதாட்டம் என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது என்று கூறினார். மேலும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தலாமே தவிர தடை விதிக்க…

மேலும் படிக்க

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணாக்கப்பட்ட அவலம்..!!

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி மதுரை வலையங்குளம் பகுதியில் நேற்று பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதற்காக 60 ஏக்கர் திடலில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.நேற்று முன்தினமே மாநாட்டு திடலில் அலைகடலென தொண்டர்கள் திரண்டனர். நேற்று காலை லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர். மாநாட்டை தொடங்கிவைக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை 8.45 மணிக்கு மண்டேலா நகர் பகுதிக்கு வந்தார். தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம், கரகாட்டத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணியளவில் எடப்பாடி பழனிசாமி…

மேலும் படிக்க

7 குழந்தைகளை கொடூரமாக கொன்ற நர்சுக்கு வாழ்நாள் சிறை தண்டனை ~ இங்கிலாந்து..!!

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்சு, சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின்போது பணியாற்றி வந்தது தெரிந்தது. இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகமும்…

மேலும் படிக்க

ஹிஜாப் அணிந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு..!!

திருவண்ணாமலையை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நேற்று இந்தி தேர்வு எழுதுவதற்காக 500க்கும் மேற்பட்ட மாணவிகள் காலை முதல் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அப்போது திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த அரபு ஆசிரியை சபானா என்பவர் ஹிஜாப் அணிந்து கொண்டு ஹிந்தி மதிமா என்ற தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளார். ஹால் டிக்கெட் காண்பித்து உள்ளே சென்ற அவருக்கு கேள்வி தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் சில நிமிடங்களில் ஹிஜாப் அணிந்து வந்ததால் அவருக்கு தேர்வு எழுத அனுமதி…

மேலும் படிக்க

கார், வீடு மற்றும் பணம் தருவதாக ஏமாற்றம்..!! “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்”ஆவணப்பட இயக்குநர் மீது பெள்ளி புகார்..!!

யானைகளுக்கும், பாகனங்களுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் வகையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் ”தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண படத்தை கார்த்திகி கோன்சால்வல்ஸ் இயக்கினார். இந்த ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி பிரபலமாகிய நிலையில் இப்படம் சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றது. இந்நிலையில் ஆஸ்கர் தம்பதிகளான யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியரை ஆவணப்பட இயக்குநர் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது மட்டுமல்லாமல், இயக்குநர் மீது…

மேலும் படிக்க

ரூ.20 லட்சம் வரை வசூல் : நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையங்களின் கட்டணத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்..!!

 நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தமிழக முதல்வருக்கு, அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்களின் (கோச்சிங் சென்டர்கள்) கட்டணத்தையும், தரத்தையும் முறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நீட், ஜேஇஇ மற்றும் பல நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இப்பயிற்சி மையங்களில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். தரத்தை நிர்ணயம்…

மேலும் படிக்க

தக்காளியைத் தொடர்ந்து இன்று முதல் வெங்காயம் மானிய விலையில் விற்பனை..!!

தக்காளியைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) முதல் தலைநகர் டெல்லியில் வெங்காயத்தை மானிய விலையில் விற்கவுள்ளதாக தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் காப்பு இருப்பில் (பஃபர் ஸ்டாக்) இருந்து பெரிய வெங்காயத்தை கிலோ ரூ.25-க்கு விற்பதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே தக்காளியை மானிய விலையில் மத்திய அரசு விற்பானை செய்து வருகிறது. சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வைத்துக்குள் அரசாங்கம் 2023 – 24 நிதியாண்டில் காப்பு இருப்பு வெங்காயத்தின் அளவை 3 லட்சம்…

மேலும் படிக்க

மெரினாவில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் மாயம்..!!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் அருள் (வயது 14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருள் தன்னுடைய நண்பர்களான யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு அருகே கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது மாணவர்கள் 3 பேரும் கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். இதை அங்கிருந்த பொதுமக்கள்…

மேலும் படிக்க

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயரும் அபாயம்..!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடந்த வாரத்தைவிட உயர்ந்து இருக்கிறது. ஆடி மாதம் நிறைவு பெற்றதையொட்டி, ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும், வரத்து குறைவாக இருப்பதாலும் பூக்களின் விலை தற்போது உயர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் நேற்று முன்தினம் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து இருந்தது. உதாரணமாக மல்லிகைப்பூ ஒரு கிலோ சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனை ஆனது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் 2 முதல்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram