பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் சினிமாவில் நடிக்கவைப்பதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.கடந்த 2021ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட மதுரவாயலை சேர்ந்த சத்தியபிரகாஷுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம், அபராத தொகையில் ரூ.55 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த…

மேலும் படிக்க

‘பிரக்ஞானந்தாவை’ நேரில் அழைத்து ‘பிரதமர் மோடி’ பாராட்டியுள்ளார்..!!

சமீபத்தில் நடந்து முடிந்த ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 2வது இடம் பெற்றார். இறுதிப்போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் மோதிய பிரக்ஞானந்தா வெற்றிக்காக கடுமையாக போராடினார். இறுதியில் கார்ல்செனின் கைகள் ஓங்கியதால், பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பெற்றார்.பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையான தருணம். என்னையும் என் பெற்றோரையும் ஊக்கப்படுத்திய உங்கள் அனைத்து வார்த்தைகளுக்கும் நன்றி. என தெரிவித்துள்ளார்.இந்த நிலையில்…

மேலும் படிக்க

‘கவின்’ நடித்து வரும் “ஸ்டார்” திரைப்படத்தின் முன்னோட்ட விடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்..!!

சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதற்கிடையே, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இலனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் குரலில் வரும் நானே எதிர்த்து நின்றாலும் என் கனவது வீழாது என்ற வாசகம்…

மேலும் படிக்க

“பர்கர் கிங்” நுகர்வோரை ஏமாற்றி வருவதாக ‘மியாமி’ நீதிமன்றத்தில்      வாடிக்கையாளர் ஒருவர் பர்கர் கிங்கிற்கு எதிராக வழக்கு..!!

பிரபல துரித உணவு நிறுவனங்கள் சமீபத்தில் தவறான விளம்பரம் செய்ததாகக் கூறி சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளன. இந்த ஆண்டு, டகோ பெல் அமெரிக்காவில் பீட்சா மற்றும் ரேப்களை விற்றதற்காக தவறான விளம்பரத்திற்காக வழக்குத் தொடரப்பட்டது. அந்த வகையில், பர்கர் கிங் ஸ்டோர் மெனு போர்டுகளில் பெரிய புகைப்படத்தை வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்ததாக வழக்கு தொடரப்பட்டது.ஆர்டர் செய்த பின் வாடிக்கையாளர்களுக்கு கடையில் உள்ள மெனு போர்டில் உள்ள புகைப்படத்தை விட சிறிய அளவிலான பர்கர் வழங்கப்பட்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றி…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 30) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,240-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை கிராமுக்கு 00.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ…

மேலும் படிக்க

மனைவியின் பிறந்த நாளுக்கு புது துணி வாங்கி கொடுக்க முடியாத விரக்தியில் கணவர் தற்கொலை..!!

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை பராக்கா பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). பிளம்பர். இவருடைய மனைவி தேவி (31). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆகிறது. தேவிக்கு நேற்று பிறந்த நாள். இதனால் அவருக்கு புது துணி வாங்கி கொடுக்க தனது தாயாரிடம் ரூ.2 ஆயிரம் தரும்படி இளையராஜா கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த இளையராஜா, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தனது மனைவி தேவிக்கு பிறந்த நாள்…

மேலும் படிக்க

ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!!

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேள்வி பதிலாக பல்வேறு விஷயங்களை வீடியோ வடிவில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் ஆடியோ சீரிஸ் (Podcast) மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த ஆடியோ சீரிஸ்-க்கு ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ (Speaking for india) என்று தலைப்பு வைத்துள்ளார். அதற்கு ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற தலைப்பை வைத்துக் கொள்ளலாமா..? தெற்கிலிருந்து வரும் இந்த…

மேலும் படிக்க

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை..!!

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 49 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏரிக்கரையில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த அவரை பீகார் மாநிலத்தை சேர்ந்த இனர்ஜூட் முகியா (வயது 28) தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். அதே நாளில் நாயக்கன் பேட்டையை சேர்ந்த 30 வயது பெண்ணையும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவர்…

மேலும் படிக்க

தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!!

தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சின்னமலை-ஆலந்தூர் மார்க்கத்தில் ஒற்றை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. விம்கோ நகர் முதல் சின்னமலை வரையிலான சாதாரண சேவைகள் தொடர்ந்து தற்போது இயக்கப்படுகின்றன. அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று அதில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பதிவிட்டுள்ளது. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ…

மேலும் படிக்க

6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது..!!

6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு இருந்த நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் காலாண்டு, அரையாண்டு போன்ற தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் முறையை பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, நடைபெற உள்ள காலாண்டுத்தேர்வில் அமல்படுத்த இருக்கிறது. தற்போது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு வருகிற 15-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram