கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த கனமழை 27-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு நேற்று…

மேலும் படிக்க

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது..!!

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவர் கடந்த மாதம் 15-ந் தேதி இரவு வெங்கமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆசாமி ஜோதிமணி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்து ஜோதிமணி கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தை அடுத்த சக்தி தியேட்டர் ரோட்டில்…

மேலும் படிக்க

அபுதாபியில் இளைஞருக்கு புதிய வகை கொரானோ தொற்று..!!

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி புதிய கொரோனா வைரஸ் MERS வகை அபுதாபியில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அபுதாபியில் உள்ள அல் அய்ன் நகரத்தில் இளைஞர் ஒருவருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நோய்த்தொற்று கண்டறியப்பட்ட இளைஞரிடம் தொடர்பில் இருந்த  108 பேரை பரிசோதனை செய்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் தொடர்பில் இருந்த யாருக்கும் நோய்த் தொற்று பரவவில்லை என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. Middle East Respiratory…

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது..!!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 71 மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி, அதன்முலம் கிடைக்கப்பெற்ற கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இடங்களை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த…

மேலும் படிக்க

அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகை நான்..!! ~ சாக்‌ஷி சிங்..!!

நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி சிங் தோனி இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட் என்கிற திரைப்படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் முதல் திரைப்படமாக அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற தமிழ் படத்தை தயாரித்துள்ளனர். ஹரீஸ் கல்யாண், இவானா நடித்துள்ள ‘எல்ஜிஎம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிற ஜூலை 28ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தயாரிப்பாளரான சாக்‌ஷி சிங் தோனி…

மேலும் படிக்க

பயன்பாடின்றி முடங்கிய காஞ்சி அண்ணா டிஜிட்டல் நூலகம்..!!

மதுரையில் கலைஞர் பெயரில் பிரம்மாண்ட நூலகம் திறந்த தமிழக அரசுக்கு காஞ்சிபுரத்தில் அண்ணா பெயரில் உள்ள டிஜிட்டல் கிளை நூலகம் செயல்பாடு இல்லாமல் முடங்கிக் கிடப்பது தெரியுமா என கேள்வி எழுப்புகின்றனர் வாசிப்பாளர்கள். இந்த நூலகம் செயல்படாததால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பலர் சிரமத்தை சந்திக்கின்றனர். காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள விளக்கொளி பெருமாள் கோயில் தெருவில் அண்ணா கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கிளை நூலகமானது மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நூலகத்தில்…

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை..!!

தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சூழ்நிலையில், நீண்டகாலமாக நிலவிவரும் இப்பிரச்சினையைத் தீர்க்க தூதரக அளவிலான முயற்சிகளை முடுக்கிவிடுமாறு தான் அண்மையில் கோரிக்கை விடுத்தேன். இருப்பினும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து ஆழ்ந்த…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 24) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.வெள்ளி விலை 0.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00-க்கு விற்பனையாகிறது. ஒரு…

மேலும் படிக்க

லண்டனில் ரூ.1,200 கோடிக்கு மாளிகை வாங்கிய இந்தியர்..!!

இந்திய கோடீஸ்வரர் ரவி ரூயா, லண்டனில் ரூ.1,200 கோடி மதிப்பில் மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார். ரஷ்ய முதலீட்டாளர் ஆன்டிரி கோஞ்சரென்கோவிடமிருந்து இந்த மாளிகையை அவர் வாங்கியுள்ளார். சமீப ஆண்டுகளில், லண்டனில் மிகப் பெரும் தொகையில் வாங்கப்பட்ட மாளிகையாக இது பார்க்கப்படுகிறது.இவர் ரஷ்ய அரசு நிறுவனமான காஸ்ப்ரோம் இன்வென்ஸ்ட் யூக் நிறுவன முன்னாள் துணை தலைமை நிர்வாக அதிகாரி. லண்டனில் 150 பார்க் சாலையில் ஹனோவர் லாட்ஜ் மாளிகை அமைந்துள்ளது. 1827-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாளிகை தொடர்ந்து…

மேலும் படிக்க

பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை ~ உக்ரைன் விமானப் படை வேதனை..!!

பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி துல்லியமாக இலக்கை தாக்குகிறது என்று உக்ரைன் விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இது ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. இந்த ஏவுகணை இந்தியாவில் பிரம்மோஸ் என்றும் ரஷ்யாவில் ‘பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே 500 நாட்களுக்கும்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram