உலக புலிகள் தின விழா விளையாட்டு போட்டியில் ஏராளமான மாணவ ~ மாணவிகள் கலந்து கொண்டனர்..!!
உலக புலிகள் தினவிழா ஆண்டு தோறும் ஜூலை மாதம் 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலக புலிகள் தின விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் புலிகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்கும் வகையில் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகள் உடுமலை பழனி சாலையில் உள்ள ராஜலட்சுமி கெங்குசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…