கேரளா விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை..!!

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, அரக்கோணத்தில் இருந்து கேரளாவிற்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைகிறது. மீட்புப்பணியில் ஈடுபட ஏதுவாக ஒரு குழுவுற்கு 25 பேர் என 175 பேர் கொண்ட 7 குழுக்கள் கேரளா சென்றுள்ளது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

தக்காளியைத் தொடர்ந்து மற்ற காய்கறி விலையும் கிடுகிடு உயர்வு..!!

தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்தது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை மக்கள் வாங்கி சென்றனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று மேலும்…

மேலும் படிக்க

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு..!!

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்து உள்ளது. ரூ.1937-க்கு விற்ற வணிக சிலிண்டர், இம்மாதம்…

மேலும் படிக்க

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்து தமிழக அரசு அரசாணை..!!

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, அமைச்சர் (நிதி, மனிதவள மேலாண்மை) அவர்களால், வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2010-2011-ம் கல்வியாண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச்சாளர முறையில் தொழிற்கல்வி…

மேலும் படிக்க

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெ.வா. மின் உற்பத்தி பாதிப்பு..!!

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் தலா 3 அலகுகளில் 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட் 2 அலகுகளில் 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக…

மேலும் படிக்க

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரிப்பு..!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.80 அதிகரித்து ரூ.43,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.10 அதிகரித்து 5,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து 75.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்..!!

கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். * இரு மாநில எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். மேல் மற்றும் கீழ்நிலை நீர் தொட்டிகளை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram