சிங்கிளா இருந்தா குத்தமாயா..?!எங்களுக்கெல்லாம் வேலை இருக்காதா..?!! வைரல் ஆன Manager ~ Employee உரையாடல்..!!

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபருக்கும் அந்நிறுவனத்தின் மேனேஜருக்கும் சமூக வலைதளத்தில் உரையாடல் நடந்துள்ளது. அதில் மேனேஜர் பணியாளரிடம் நாளை காலை 7 மணி ஷிப்டிற்கு வேலைக்கு வருமாறு குறுஞ்செய்தி அனுப்புகிறார். அதற்கு பணியாளர் பதில் அளிக்காத நிலையில், நான் அனுப்பிய செய்தியை நீ பார்த்துவிட்டதை அறிகிறேன். வேலைக்கு  வர காலை 6.15 மணிக்கு தயாராக இருக்கவும் எனக் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள பணியாளர், நாளை எனக்கு வார விடுமுறை நாள், அதனால் பிரைன் என்ற…

மேலும் படிக்க

நடிகர் தனுஷ் உள்ளிட்ட 14 நடிகர்களுக்கு ‘ரெட்கார்டு’ விதிக்கக் கோரும் தயாரிப்பாளர் சங்கம்..!!

ஜூன் 18ம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் வழங்காத நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பல தரப்பில் பட்டியல் எடுத்து சம்பந்தப்பட்ட நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவெடுக்கப்பட்டது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

பெரியகுளத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்..!!

தேனி, பெரியகுளத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் போலீசார் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாசுதேவன் (43) என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து போலீசார் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே போல் எண்டபுளி ஊராட்சியில் முருகமலை சாலையில் சந்தேகப்படும்படி நின்ற…

மேலும் படிக்க

நலத்திட்ட உதவிகள் செய்த மக்கள் இயக்க நிர்வாகிகள் ~ கைப்பட கடிதம் எழுதி பாராட்டிய ‘விஜய்’..!!

நடிகர் விஜய்-ன் பிறந்தநாளை கொண்டாடிய அவரது ரசிகர்கள், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு இலவச பெட்ரோல், இலவச மதிய உணவு, இலவச ஆட்டோ பயணம், முதலானவற்றை மேற்கொண்டும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், தனது பிறந்தநாள் அன்று, நலத்திட்ட உதவிகள் வழங்கிய மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ”கடந்த ஜூன் 22 அன்று,…

மேலும் படிக்க

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு..!!

வாணாபுரம் அருகே உள்ள மெய்யூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்பவரின் மனைவி கலைவாணி (வயது 37). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த கலைவாணியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த கலைவாணியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வாணாபுரம்…

மேலும் படிக்க

தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா..!!

இந்த சீசனுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். காயத்தால் ஒரு மாதங்கள் ஓய்வில் இருந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், 2வது முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. 87.66 மீட்டர் தூரத்திற்கு…

மேலும் படிக்க

மருத்துவர்கள் தினம்..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!!

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பெருந்தொற்றாகட்டும் – பேரிடராகட்டும் தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதி மனிதக் குலத்தைப் பாதுகாத்து வரும் மருத்துவர்கள் அனைவருக்கும் என்னுடைய மருத்துவர்கள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தன்னலம் பாராது பிறர் நலம் பேணும் மருத்துவர்களின் ஏற்றத்துக்கு நம் திராவிட மாடல் அரசு என்றும் தோளோடு தோள் நிற்கும். NEWS EDITOR…

மேலும் படிக்க

ஒன்றிய குழு தலைவர் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளுக்கு 12 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த தங்கதனம் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று திருத்தணி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் தங்கதனம் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு வரவேற்றார், ஒன்றிய குழு துணைத் தலைவர் இ.என்.கண்டிகை ரவி முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கவுன்சிலர்கள் எழுந்து, கூட்டம் முடிந்ததும்…

மேலும் படிக்க

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!!

தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 02.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்…

மேலும் படிக்க

கென்யாவில் தாறுமாறாக ஓடிய டிரக்; பல வாகனங்களில் மோதி விபத்து..!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மேற்கு பகுதியில் டிரக் ஒன்று விபத்தில் சிக்கியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிரக் அடுத்தடுத்து வாகனங்களில் மோதிக்கொண்டு சாலையோரம் நின்றவர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 51 பேர் பலியாகினர். 32 பேர் காயம் அடைந்தனர். நைரோபியில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் உள்ள லண்டியானி நகரத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த பகுதி அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும். NEWS EDITOR…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram