மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நரசிம்மசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 42). இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள உள்ளிம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிரிஜா (34) என்பவருடன் 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 7 ஆண்டுகளாக விநாயகம் தனது மனைவி கிரிஜாவுடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்ததால் இவர்களது மகன் பாட்டி வீட்டில் தங்கியிருந்து அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்….