ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க வேண்டாம்
திருப்பூர் – வஞ்சிபாளையம் இடையே கடந்த 2-ம் தேதி ரெயில் தண்டவாளத்தில் இருவர் மதுபோதையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, பிளாஸ்பூர் விரைவு ரெயிலில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கடந்த மார்ச் 13-ம் தேதி வாழப்பாடி – ஏத்தாப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், ரெயிலில் அடிபட்டு இறந்தார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. தண்டவாளங்கள் ரெயில்கள் செல்வதற்கு மட்டுமே. தண்டவாளத்தைகடந்து செல்வது ரெயில்வே…